கருப்பு கவுனி அரிசி லட்டு

தவிடு நீக்காத இந்த கருப்பு கவுனி அரிசியில் அபரிவிதமான இரும்பு, தாமிரம், துத்தநாகம், மெக்னீஷியம், மேங்கனீஸ், சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ் கனிமங்களும், வைட்டமின் சத்துக்களும், நார்ச் சத்துக்களும், உடலுக்கு தேவையான அமினோ அமிலங்களும், இருதய நோயினை போக்கக் கூடிய எண்ணெய் சத்துக்களும் அதிகம் உள்ளது.

சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு தேவையாக அனைத்து சத்துக்களும் இந்த அரிசியில் உள்ளது. அளவோடு தொடர்ந்து இந்த அரிசியை உண்ண நல்ல பலன் கிடைக்கும்.

ஒவ்வொரு அரிசியையும் ஒரு கால்சியம் மருந்து என்று கூறும் அளவு அதில் சுண்ணாம்புச் சத்து உள்ளது. குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கும், கர்ப்பிணிகளுக்கு தேவையான சுண்ணாம்பு சத்துக்களும் இந்த அரிசியே வரப்பிரசாதம். 

மேலும் கவுனி அரிசியின் பயன்கள், நன்மைகள், பூர்விகம் பற்றி தெரிந்துக்கொள்ள – கவுனி அரிசி.

தேவையான பொருட்கள்

  • 1 கப் கருப்பு கவுனி அரிசி
  • 1/4 கப் துருவிய முந்திரி, பாதாம், நிலக்கடலை
  • பசு நெய்
  • ¾ கப் நாட்டு சர்க்கரை

செய்முறை

கவுனி அரிசியை நன்கு சுத்தம் செய்து கொள்ளவேண்டும். 

கவுனி அரிசியை மாவாக நன்கு அரைத்துக்கொள்ளவும், 

பின் அதனை வெறும் வாணலியில் சிறி தீயில் வைத்து வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளவேண்டும். 

அதன் பின் துருவிய  முந்திரி, பாதாம், நிலக்கடலை கலவையை லேசாக வாசனை வரும் வரை வறுக்கவும். 

இந்த கலவைகள் சூடாக இருக்கும் பொழுதே பொடித்த நாட்டு சர்க்கரையை கல‌ந்து நெ‌ய்யை உரு‌க்‌‌கி ஊ‌ற்‌றி சுட‌ச் சுட சிறு உருண்டைகளாகப் பிடித்துக் எடுக்க வேண்டும். 

கருப்பு நிற அரிசியான கவுனி அரிசியில் சத்தான சுவையான லட்டு தயார். 

கருப்பு கவுனி அரிசி லட்டு

தவிடு நீக்காத இந்த கருப்பு கவுனி அரிசியில் அபரிவிதமான இரும்பு, தாமிரம், துத்தநாகம், மெக்னீஷியம், மேங்கனீஸ், சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ் கனிமங்களும், வைட்டமின் சத்துக்களும், நார்ச் சத்துக்களும், உடலுக்கு தேவையான அமினோ அமிலங்களும், இருதய நோயினை போக்கக் கூடிய எண்ணெய் சத்துக்களும் அதிகம் உள்ளது.
சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு தேவையாக அனைத்து சத்துக்களும் இந்த அரிசியில் உள்ளது. அளவோடு தொடர்ந்து இந்த அரிசியை உண்ண நல்ல பலன் கிடைக்கும்.
ஒவ்வொரு அரிசியையும் ஒரு கால்சியம் மருந்து என்று கூறும் அளவு அதில் சுண்ணாம்புச் சத்து உள்ளது. குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கும், கர்ப்பிணிகளுக்கு தேவையான சுண்ணாம்பு சத்துக்களும் இந்த அரிசியே வரப்பிரசாதம். 
ஆயத்த நேரம் : – 15 minutes
சமைக்கும் நேரம் : – 15 minutes
மொத்த நேரம் : – 30 minutes

தேவையான பொருட்கள்

  • 1 கப் கவுனி அரிசி
  • 1/4 கப் துருவிய முந்திரி, பாதாம், நிலக்கடலை
  • பசு நெய்
  • ¾ கப் நாட்டு சர்க்கரை

செய்முறை

  • கவுனி அரிசியை நன்கு சுத்தம் செய்து கொள்ளவேண்டும். 
  • கவுனி அரிசியை மாவாக நன்கு அரைத்துக்கொள்ளவும், 
  • பின் அதனை வெறும் வாணலியில் சிறி தீயில் வைத்து வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளவேண்டும். 
  • அதன் பின் துருவிய  முந்திரி, பாதாம், நிலக்கடலை கலவையை லேசாக வாசனை வரும் வரை வறுக்கவும். 
  • இந்த கலவைகள் சூடாக இருக்கும் பொழுதே பொடித்த நாட்டு சர்க்கரையை கல‌ந்து நெ‌ய்யை உரு‌க்‌‌கி ஊ‌ற்‌றி சுட‌ச் சுட சிறு உருண்டைகளாகப் பிடித்துக் எடுக்க வேண்டும். 
  • கருப்பு நிற அரிசியான கவுனி அரிசியில் சத்தான சுவையான லட்டு தயார்.