வேலைக்கு செல்லும் தாய்மார்களும் இந்த எனர்ஜி லட்டை தயாரித்து வைத்து ஒவ்வொருநாளும் பள்ளிக்கும் கொடுத்தனுப்பலாம், மாலை சிற்றுண்டியாகவும் அளிக்கலாம்.
கம்பு, கருப்பு கவுனி அரிசி மற்றும் கேழ்வரகில் தயாரிக்கும் உணவுகள் உடலில் மந்திரமாக வேலை செய்யும் உணவுகள். அதிலும் வளரும் குழந்தைகளுக்கு அவசியமான பல ஊட்டச்சத்துக்கள் இதில் உள்ளது.
குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திற்கும் உடல் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கும் சிறந்த லட்டு. சோம்பலைப் போக்கும். வெள்ளை சர்க்கரைக்கு பதில் நாட்டு சர்க்கரை, கருப்பட்டி கலந்த உணவுகளை தயாரித்து கொடுக்க குழந்தைகளின் எலும்பு வளர்ச்சி சீராக இருக்கும்.
மேலும் கேழ்வரகு, கம்பு, கருப்பு கவுனி அரிசியின் நன்மைகள், பயன்கள் சத்துகளை கூடுதலாக தெரிந்துக்கொண்டு தயாரித்து அனைவரும் உட்கொள்ள ஆரோக்கியம் அதிகரிக்கும்.
தேவையான பொருட்கள்
- ¼ கப் கம்பு மாவு
- ¼ கப் கேழ்வரகு மாவு
- ¼ கப் சிகப்பு சிறுசோள மாவு
- ¼ கப் கருப்பு கவுனி அரிசி மாவு
- ¼ கப் துருவிய முந்திரி, பாதாம், நிலக்கடலை
- பசு நெய்
- ¾ கப் நாட்டு சர்க்கரை
செய்முறை
எளிதாகவும், மலிவாகவும் கிடைக்கும் கம்பு, கேழ்வரகு மாவுகளை மட்டும் வைத்து இந்த லட்டினை தயாரிக்கலாம்.
சிகப்பு சோளம், கவுனி அரிசியை மாவாக நன்கு அரைத்துக்கொள்ளவும்,
பின் அனைத்து மாவையும் வெறும் வாணலியில் சிறு தீயில் வைத்து வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளவேண்டும்.
அதன் பின் துருவிய முந்திரி, பாதாம், நிலக்கடலை கலவையை லேசாக வாசனை வரும் வரை பசு நெய்யில் வறுக்கவும்.
இந்த கலவைகள் சூடாக இருக்கும் பொழுதே பொடித்த நாட்டு சர்க்கரையை கலந்து நெய்யை உருக்கி ஊற்றி கைபொறுக்கும் சூட்டில் சுடச் சுட சிறு உருண்டைகளாகப் பிடித்துக் எடுக்க வேண்டும்.
சத்தான எனர்ஜி லட்டு தயார்.
ஒருமுறை தயாரித்த இந்த லட்டினை ஒருவாரம் வரை வைத்துக்கொள்ளலாம்.
எனர்ஜி லட்டு
தேவையான பொருட்கள்
- ¼ கப் கம்பு மாவு
- ¼ கப் கேழ்வரகு மாவு
- ¼ கப் சிகப்பு சிறுசோள மாவு
- ¼ கப் கருப்பு கவுனி அரிசி மாவு
- ¼ கப் துருவிய முந்திரி, பாதாம், நிலக்கடலை
- பசு நெய்
- ¾ கப் நாட்டு சர்க்கரை
செய்முறை
- எளிதாகவும், மலிவாகவும் கிடைக்கும் கம்பு, கேழ்வரகு மாவுகளை மட்டும் வைத்து இந்த லட்டினை தயாரிக்கலாம்.
- சிகப்பு சோளம், கவுனி அரிசியை மாவாக நன்கு அரைத்துக்கொள்ளவும்,
- பின் அனைத்து மாவையும் வெறும் வாணலியில் சிறு தீயில் வைத்து வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளவேண்டும்.
- அதன் பின் துருவிய முந்திரி, பாதாம், நிலக்கடலை கலவையை லேசாக வாசனை வரும் வரை பசு நெய்யில் வறுக்கவும்.
- இந்த கலவைகள் சூடாக இருக்கும் பொழுதே பொடித்த நாட்டு சர்க்கரையை கலந்து நெய்யை உருக்கி ஊற்றி கைபொறுக்கும் சூட்டில் சுடச் சுட சிறு உருண்டைகளாகப் பிடித்துக் எடுக்க வேண்டும்.
- சத்தான எனர்ஜி லட்டு தயார்.
- ஒருமுறை தயாரித்த இந்த லட்டினை ஒருவாரம் வரை வைத்துக்கொள்ளலாம்.