கருப்பட்டி காபி / Karupatti Coffee

நல்ல ஒரு செரிமானத்தை அளிக்கும் காலை காபி இதுவாக இருக்க உடல் ஆரோக்கியம் மேம்படும். உடலுக்கு தேவையான இரும்பு சத்துக்களை எளிதில் அளிக்கும் பானம். சளி, இருமல், தொண்டைப்புண், தொண்டை கரகரப்பு, தொண்டைக்கட்டு போன்ற பிரச்சனைகளுக்கும் சிறந்த காபி. For English Karupatti Coffee Recipe.

தேவையான பொருட்கள்

  • 1/2 கப் உலர்ந்த இஞ்சி/சுக்கு
  • 2 ஸ்பூன் மல்லி
  • 1 ஸ்பூன் சீரகம்
  • 1 ஸ்பூன் மிளகு
  • 2 ஸ்பூன் கருப்பட்டி

செய்முறை

  • முதலில் சுக்கு, மல்லி, சீரகம், மிளகு ஆகியவற்றை ஒன்றிரண்டாக தட்டி பின் மிக்ஸியில் போட்டு நன்கு தூளாக பொடி செய்து கொள்ள வேண்டும்.
  • இதனை ஒரு காற்று புகாத டப்பாவில் எடுத்துவைத்துக் கொள்ளவேண்டும்.
  • தேவைக்கேற்ப ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, கொதிக்க ஆரம்பித்ததும், அதில் இந்த பொடி ஒரு ஸ்பூன் மற்றும் கருப்பட்டியை சேர்த்து, 2-3 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும்.
  • பின்பு அடுப்பை அணைத்து வடிகட்டினால் சூடான கருப்பட்டி காபி தயார்.
5 from 1 vote

கருப்பட்டி காபி

நல்ல ஒரு செரிமானத்தை அளிக்கும் காலை காபி இதுவாக இருக்க உடல் ஆரோக்கியம் மேம்படும். உடலுக்கு தேவையான இரும்பு சத்துக்களை எளிதில் அளிக்கும் பானம். சளி, இருமல், தொண்டைப்புண், தொண்டை கரகரப்பு, தொண்டைக்கட்டு போன்ற பிரச்சனைகளுக்கும் சிறந்த காபி.
ஆயத்த நேரம் : – 5 minutes
சமைக்கும் நேரம் : – 5 minutes
மொத்த நேரம் : – 10 minutes

தேவையான பொருட்கள்

  • 1/2 கப் உலர்ந்த இஞ்சி/சுக்கு தூள்
  • 2 ஸ்பூன் மல்லி
  • 1 ஸ்பூன் சீரகம்
  • 1 ஸ்பூன் மிளகு
  • 2 ஸ்பூன் கருப்பட்டி

செய்முறை

  • முதலில் சுக்கு, மல்லி, சீரகம், மிளகு ஆகியவற்றை ஒன்றிரண்டாக தட்டி பின் மிக்ஸியில் போட்டு நன்கு தூளாக பொடி செய்து கொள்ள வேண்டும்.
  • இதனை ஒரு காற்று புகாத டப்பாவில் எடுத்துவைத்துக் கொள்ளவேண்டும்.
  • தேவைக்கேற்ப ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, கொதிக்க ஆரம்பித்ததும், அதில் இந்த பொடி ஒரு ஸ்பூன் மற்றும் கருப்பட்டியை சேர்த்து, 2-3 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும்.
  • பின்பு அடுப்பை அணைத்து வடிகட்டினால் சூடான கருப்பட்டி காபி தயார்.

1 thought on “கருப்பட்டி காபி / Karupatti Coffee

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recipe Rating