karunkuruvai rice, traditional rice, parambariya arisi, organic rice, low cost organic rice, red rice, sigapparisi, fiber rich rice, diabetic rice, weight loss rice

கருங்குறுவை அரிசி பயன்கள்

மூலிகைகளில் காயகல்ப மூலிகைகள் பற்றி அறிந்திருப்போம். அரிசியில் கூட காயகல்ப தன்மை கொண்ட அரிசி ஒன்று உள்ளது என்றால் அது இந்த கருங்குறுவை அரிசி தான். உடலுக்கு சிறந்த பலத்தையும், ஊட்டத்தையும் அளிக்கும் அற்புத அரிசி இந்த கருங்குறுவை அரிசி.

கருப்பு நெல்லைக் கொண்ட இந்த அரிசி சிவப்பு நிற அரிசியை கொண்டது. நூற்றி பத்துநாள் விளையக்கூடியது. மூன்றடி மட்டுமே வளரக்கூடிய ஒரு அற்புதமான அரிசி. இயற்கையிலேயே நோய் எதிர்ப்பு ஆற்றலை கொண்ட அரிசி. பூச்சி நோய் தாக்குதல் இல்லாது வளரக்கூடியது. எந்த விதமான இரசாயனமும் இல்லாமல் இயற்கை விவசாயத்தில் விளையும் ஆர்கானிக் அரிசி இந்த நடுத்தர ரக பாரம்பரிய அரிசி.

கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, பி, பி12, கே, இ சத்துக்கள், மாவுச்சத்து, புரதச் சத்துக்களை அதிகம் கொண்ட அரிசி. சித்த மருத்துவத்தில் அதிகமாக பயன்படும் அரிசி. சித்த மருந்துகளில் மருத்துவர்கள் இந்த கருங்குறுவை அரிசியை சேர்த்து மருந்து தயாரிக்க பயன்படுத்துகின்றனர். இந்த அரிசியின் காடி கொடிய நோய்களையும் நீக்க உதவும்.

karunkuruvai rice, traditional rice, parambariya arisi, organic rice, low cost organic rice, red rice, sigapparisi, fiber rich rice, diabetic rice, weight loss rice

சாதமாகவும் உண்ண உகந்தது. இட்லி, தோசை, இடியப்பம் என பலகாரங்களுக்கு ஏற்றது. சுவையான சிவப்பரிசி. மேலும் சில உணவுகள் கருங்குறுவை அரிசி லட்டு, கருங்குறுவை மசாலா கஞ்சியையும் தயாரிக்கலாம். மேலும் கருங்குறுவை அரிசியைப் பற்றி பல சுவாரசியமான தகவல்கள், நன்மைகள், பயன்களை தெரிந்துகொள்ள கருங்குறுவை அரிசி பக்கத்திற்கு இணையவும்.

https://www.youtube.com/watch?v=u-sDXb1O36Q

கருங்குறுவை அரிசி பயன்கள்

  • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
  • இழந்த சக்தியை மீட்டுத் தரும்.
  • ஆண்மையை அதிகரிக்கும்.
  • குழந்தையின்மையை போக்கும்.
  • பாரம்பரிய அரிசிகளில் அதிக மருத்துவகுணம் கொண்ட அரிசி.
  • உடல் பலத்தை அதிகரிக்கும்.
  • விந்தணு குறைபாடு நீங்கும்.
  • உடலுக்கு தெம்பை அளிக்கும்.
  • மலச்சிக்கலைப் போக்கும்.
  • தொற்றுநோய்க்கு சிறந்தது.
  • கெட்ட கொழுப்பை அகற்றும்.
  • இரத்தத்தைச் சுத்தப்படுத்தி உடலுக்கு புத்துணர்ச்சிக் கொடுக்கும்.
  • யானைக்கால் வியாதியை போக்கும்.
  • வெண்புள்ளி – வெண் குஷ்டத்தை குறைக்கும்.
  • நீரிழிவிற்கு சிறந்தது.
  • பித்தத்தை அகற்றும்.
  • சரும வியாதிகளுக்கு சிறந்தது.
  • மருந்து மாத்திரைகளால் ஏற்படும் பக்க விளைவுகளை குறைக்கும்.
  • விஷக்கடிகளின் தாக்கத்தை குறைக்கும்.
  • நோய் கிருமிகளின் தாக்கத்தை குறைத்து, அழித்து வெளியேற்றும் தன்மை கொண்ட அரிசி.
  • காய்ச்சல், சளி, இருமல், வைரஸ் தொற்றுகளுக்கு சிறந்தது.
  • உடல் நஞ்சை நீக்கும் அரிசி. ( Helps Detoxifying)
https://www.youtube.com/watch?v=OjpZV7eHJYo
(1 vote)