கருங்காலி மரம் – நம் மூலிகை அறிவோம்

Acacia Catechu; Ebony; கருங்காலி

பிரபஞ்ச ஆற்றலை கொண்ட மரங்களில் ஒன்று கருங்காலி. பல மருத்துவகுணங்களையும், அபூர்வ சக்தியையும் கொண்ட கருங்காலியை பயன்படுத்துபவரின் எண்ண ஓட்டத்திற்கு தகுந்த பலனைக் கொடுக்கும் தன்மையும் கொண்டது. நல்லது நினைக்க நல்ல பலனையும், கருங்காலியை பயன்படுத்துபவர் எதிர்மறை சிந்தனைக் கொண்டிருந்தால் அதற்கேற்ப எதிர்மறை பலனையும் அளிக்கும் அளவு சக்திவாய்ந்த மூலிகை மரம். கருங்காலி மரத்திற்கு உடுக்கை மரம் என்றொரு பெயரும் உள்ளது. முட்கள் நிறைந்த மரம் இந்த கருங்காலி. காலம் காலமாக நமது வீடுகளில் செய்யும் உலக்கையை இந்த மரத்திலேயே நமது முன்னோர்கள் செய்தனர்.

இந்தியாவில் பல மாநிலங்களில் வளரும் சக்திவாய்ந்த மரங்களில் ஒன்றான இந்த கருங்காலி இன்று பல இடங்களில் இதன் மருத்துவகுணம் மற்றும் அபூர்வ சக்தியினால் பலரால் தவறாகப் பயன்படுதப்படுகிறது. தமிழகத்தில் இன்று வனப்பகுதிகளில் மட்டுமே பெரும்பாலும் இந்த மரத்தைப் பார்க்க முடியும். பிற இடங்களில் இதனை சட்ட விரோதமாக அழிகின்றனர். இந்த மரம் இந்தியாவில் பல பகுதிகளில் பாதுகாக்கப்பட்ட ஒரு மரம், வெட்டுவது சட்ட விரோதமான செயல். பல இடங்களில் அதிக பணத்திற்கு கருங்காலி மர கட்டை என ஏதோ மர கட்டையை விற்கும் நிலையும் உள்ளது.

அதிக ஆற்றலைக் கொண்ட மரம் என்பதால் இதனை வீட்டில் நம்முடன் வைத்துக் கொள்வது அவ்வளவு சிறந்ததல்ல. வணங்க வேண்டிய மரம். அதனால் இது இருக்கும் இடம் கோவிலாக இருக்கலாம். அல்லது தோட்டத்தில், வீட்டினருகில் கருங்காலி மரத்தை வளர்க்க சிறந்த ஆற்றலையும் சக்தியையும் சுற்றியுள்ள இடங்களுக்கு அளிக்கும். சிந்தனை, எண்ண ஓட்டங்கள் புத்துணர்வுடனும் மனோதிடத்துடனும் இருக்கும்.

நமது நாட்டின் மரங்கள், செடி கொடி தாவரங்களைப் பற்றி தெரிந்துக் கொள்வதன் நோக்கத்தில் இந்த மரத்தையும் பற்றி தெரிந்துக் கொள்வோம். மரத்தை அழிக்காமல் இதனை வணங்குவது, இதன் காற்றை சுவாசிப்பதும் நமது மனதிற்கும் உடலுக்கும் சிறந்த ஆற்றலை அளிக்கும். கருங்காலி மரங்கள் நமது எண்ண ஓட்டத்தை சக்திபெற செய்யும் ஆற்றலையும் கொண்டுள்ளது அதனால் அவ்வாறு அழிக்காமல் கருங்காலி மரத்தின் பயனைப் பெறுவோம்.

ebony tree, karungali maram

கருங்காலி மரத்தின் அமைப்பு

இந்த கருங்காலி மரத்தின் இலைகள் கூட்டிலைகளாக இருக்கும். கருங்காலி மரத்தின் அடிப் பகுதி முழுவதும் கருப்பு நிறத்திலிருக்கும். இதன் ஹார்ட் உட் என்ற கட்டையின் மையப் பகுதி நல்ல அடர்கருப்பு நிறத்திலும் காணப்படும். மற்ற இடங்கள் அதன் வயதிற்கு தகுந்தாற்போல வெளிறிய கருப்பு நிறத்தில் இருக்கும். அதனைச் சுற்றி உள்ள கட்டைப் பகுதி மங்கிய வெள்ளை நிறத்தில் காணப்படும். கருங்காலி பட்டை மங்கிய கருப்பு நிறத்திலிருக்கும். இதுவே கருங்கலியின் முக்கிய அடையாளமாகும். கருங்காலியின் பட்டை, பிசின், வேர் ஆகியவை மருத்துவகுணம் நிறைந்தது.

கருங்காலி மரத்தின் பயன்கள்

வயிற்றுப் புழுநோய், திமிர்வாதம், இருமல், டைஃபாய்டு, பௌத்திரம், பித்தத்தால் ஏற்படும் வயிற்றுவலி, நீரிழிவு, வாய்ப்புண், தொண்டைப்புண், பெரும்பாடு, புண்கள், ஈறுகளில் ரத்தம் ஒழுகுதல் போன்ற தொந்தரவுகளுக்கு மிக சிறந்த மருந்து இந்த கருங்காலி. கருங்காலி வேர் குடிநீர் வயிற்றுப் புழு, நீரிழிவு, உடற்சோர்வு போன்ற தொந்தரவுகளுக்கு மிக சிறந்தது. கருங்காலிப் பட்டை குடிநீர் இருமல், நீரிழிவு, உடற்சோர்வு தொந்தரவுகளுக்கு சிறந்தது. இதனுடன் திரிபலா என்ற கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் ஆகியவற்றையும் சேர்த்து குடிநீர் செய்து பருக பல நோய்கள் நீங்கும். கருங்காலி பிசின் குடிநீர் கருங்கரப்பான், மேக நீரிழிவு, பெரும்பாடு, ஆண்மைக் குறைவு நீங்கும்.

(10 votes)