சளி, இருமல் என பல சுவாச மண்டலத்தில் வரும் தொந்தரவுகளுக்கு மிக சிறந்த மருந்து இந்த கற்பூரவல்லி / கற்பூரவள்ளி. மேலும் பல மருத்துவகுணங்களைக் கொண்டிருக்கும் மூலிகையும் இது. இதனை அவ்வப்பொழுது உண்பது சிறந்தது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற நல்ல சுவையான சட்னி இந்த கற்பூரவல்லி சட்னி. இதேப்போல் கற்பூரவள்ளி இலையைக் கொண்டு கற்பூரவள்ளி சூப் செய்தும் பருகலாம்.
தேவையான பொருட்கள்
- 15 – 20 கற்பூரவல்லி இலை
- 15 – 20 சின்ன வெங்காயம்
- 2 பச்சை மிளகாய்
- 2 வர மிளகாய் – 2
- சிறிது பெருங்காயம்
- உப்பு
- 3 ஸ்பூன் தேங்காய் துருவல்
- இஞ்சி
- 2 ஸ்பூன் நல்லெண்ணெய்
- 1 ஸ்பூன் உளுத்தம் பருப்பு
- சிறிது கடுகு
- சிறிது கருவேப்பிலை
செய்முறை
- ஒரு வாணலியில் நல்லெண்ணெய் சேர்த்து சிறிது உளுந்து சேர்க்கவும்.
- உளுந்து பொன்னிறமானதும் பெருங்காயம் சேர்த்து அதனுடன் சின்ன வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய், ஒரு வர மிளகாய், இஞ்சி, கற்பூரவல்லி இலைகளை சேர்க்கவும்.
- இவை சற்று வதங்கியதும் அடுப்பை அணைத்து தேங்காய் துருவலை சேர்க்கவும்.
- இவை அனைத்தும் ஆறியதும் மிக்ஸியில் உப்பு சேர்த்து அரைக்க வேண்டும்.
- பின் ஒரு வாணலியில் சிறிது நல்லெண்ணெய் சேர்த்து கடுகு. சிறிது உளுந்து, வரமிளகாய், கருவேப்பிலை சேர்த்து தாளித்து அரைத்தவற்றில் சேர்க்கவும்.
- சுவையான சத்தான கற்பூரவல்லி இலை சட்னி தயார்.
கற்பூரவல்லி இலை சட்னி
சளி, இருமல் என பல சுவாச மண்டலத்தில் வரும் தொந்தரவுகளுக்கு மிக சிறந்த மருந்து இந்த கற்பூரவல்லி. மேலும் பல மருத்துவகுணங்களைக் கொண்டிருக்கும் மூலிகையும் இது. இதனை அவ்வப்பொழுது உண்பது சிறந்தது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற நல்ல சுவையான சட்னி இந்த கற்பூரவல்லி சட்னி.
தேவையான பொருட்கள்
- 15 – 20 கற்பூரவல்லி இலை
- 15 – 20 சின்ன வெங்காயம்
- 2 பச்சை மிளகாய்
- 2 வர மிளகாய் – 2
- சிறிது பெருங்காயம்
- உப்பு
- 3 ஸ்பூன் தேங்காய் துருவல்
- சிறிது இஞ்சி