இயற்கை பூச்சி விரட்டி, இயற்கை வளர்ச்சி ஊக்கி
கற்பூர கரைசல் பயிர்களுக்கு மிகச்சிறந்த பயிர் வளர்ச்சி ஊக்கி. இந்த கரைசலை பயிர்களுக்கு தெளிப்பதால் பயிர்களின் வளர்ச்சி நன்றாக இருக்கும். மகசூலும் நன்றாக இருக்கும்.
அனைத்து வகை பயிர்களுக்கும் மிக சிறந்த பூச்சி கொல்லியாக பயன்படுகிறது.
மிக சிறந்த பயிர் ஊக்கியாக பயன்படும் இந்த கற்பூர கரைசல் செடிகளில் பூக்கள் அதிகமாக வருவதற்கு காரணமான ஹார்மோன்களை தூண்டுவதால் பூக்கள் அதிகரிப்பதோடு மகசூலும் அதிகரிக்கிறது.
கற்பூர கரைசல் தயாரிக்க தேவையான பொருட்கள்
நாட்டுப் பசு கோ மூத்திரம் – 1 லிட்டர்
வேப்ப எண்ணெய் – 50 மிலி – 80 மிலி
கட்டி கற்பூரம் – 10 கிராம்
மஞ்சள் தூள் – 20 கிராம்
இயற்கை சுண்ணாம்பு தூள் / கிளிஞ்சல் சுண்ணாம்பு – 20 கிராம்
நீலகிரி தைலம் – 10 மிலி
சீயக்காய் பொடி / பூந்திக்காய் பொடி – 20 கிராம்
கற்பூர கரைசல் தயரிக்கும் முறை
- முதலில் வேப்ப எண்ணெயை தண்ணீரில் கரையும் நிலைக்கு மாற்ற வேண்டும். இதற்கு காதி சோப்பு அல்லது சீயக்காயை பயன்படுத்திக் கொள்ளலாம். அதாவது காதிசோப்பினை வேப்ப எண்ணெயுடன் நன்கு கலந்து கொள்ளவேண்டும் அல்லது சீயக்காய் பொடியை சிறிது தண்ணீர் விட்டு கரைத்து கொள்ளவேண்டும். இந்த சியக்காய் கரைசலை வேப்பெண்ணெய்யுடன் கலக்க வேப்பெண்ணை தண்ணீரோடு நன்கு கலந்துவிடும்.
- கட்டி கற்பூரம் தண்ணீரில் கரையாது, அதனால் அதனை நீலகிரி தைலத்தை சேர்த்து கரைத்தால் கரைந்து நீர்ம நிலைக்கு வந்துவிடும்.
- செடிகளின் வளர்ச்சியைப் பொறுத்து வேப்பெண்ணையின் அளவு மாறுபடும். இளஞ்செடிகளுக்கு குறைந்த அளவும் (50 மிலி), சற்று வளர்ந்த செடிகளுக்கு சற்று கூடுதலாகவும், நன்கு வளர்ந்த செடிகளுக்கு 80 மிலி அளவும் சேர்க்கலாம். இந்த அளவிற்குள் சேர்ப்பது நல்லது.
- கற்பூரத்தின் அளவையும் செடிகளுக்கு ஏற்ப குறைத்துக் கொள்ளவேண்டும். இளஞ்செடிகளுக்கு குறைந்த அளவே போதுமானது.
- இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட கற்பூரம் கிடைத்தால் உபயோகிக்கவும். நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.
- நாட்டுப் பசு கோ மூத்திரம் புதியதாக இருந்தால் 1 லிட்டர், பழைய கோமியமாக இருந்தால் 1/2 (அரை) லிட்டர்.
- நாட்டுப் பசு கோ மூத்திரம், மஞ்சள் தூள், சுண்ணாம்பு, சீயக்காய் கலந்த வேப்ப எண்ணெய் மற்றும் நீலகிரி தைலம் கலந்த கற்பூரம் என அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்றாக கலந்து செடிகளுக்கு தெளிக்கலாம்.
- இதனை 1௦ லிட்டர் தண்ணீர் கலந்து செடிகளுக்கு தெளிக்கலாம்.
கற்பூர கரைசல் பயன்கள்
- கற்பூர கரைசல் பயிர்களுக்கு மிகச்சிறந்த பயிர் வளர்ச்சி ஊக்கி. இந்த கரைசலை பயிர்களுக்கு தெளிப்பதால் பயிர்களின் வளர்ச்சி நன்றாக இருக்கும். மகசூலும் நன்றாக இருக்கும்.
- அனைத்து வகை பயிர்களுக்கும் மிக சிறந்த பூச்சி கொல்லியாக பயன்படுகிறது.
- மிக சிறந்த பயிர் ஊக்கியாக பயன்படும் இந்த கற்பூர கரைசல் செடிகளில் பூக்கள் அதிகமாக வருவதற்கு காரணமான ஹார்மோன்களை தூண்டுவதால் பூக்கள் அதிகரிப்பதோடு மகசூலும் அதிகரிக்கிறது.
- மிக விரைவாக அதாவது மூன்றே மணி நேரத்தில் இந்த கற்பூர கரைசல் மாவுப்பூச்சியை கட்டுபடுத்துகிறது. மற்ற பூச்சி விரட்டிகளை விட வேகமாக இது செயல்படும். மாவுப்பூச்சிக்கு சிறந்தது இந்த கற்பூர கரைசல்.
- மிளகாய் செடிக்கு இந்த கற்பூர கரைசலை ஆரம்பத்திலிருந்து கொடுப்பதால் அதில் ஏற்படும் நோய்கள் கட்டுப்படும்.
- எலுமிச்சைக்கு இதனை தெளிக்க தொடர்ச்சியாக காய்களை பெறலாம்.
- கொய்யா மற்றும் பெருநேல்லியில் ஏற்படும் சம்பல் நோயினை முற்றிலும் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. விளைச்சலும் அதிகரிக்கும்.
- கருவேப்பிலைக்கு கற்பூர கரைசல் தெளிக்க அனைத்து பூச்சி தக்குதல்களிலிருந்தும் காக்கலாம். இலைகளும் நல்ல செழிப்பாக கரும் பச்சை நிறத்திலும் இருக்கும்.
- பருத்தி செடிக்கு ஆரம்பத்திலிருந்து தெளிப்பதால் காய் துளைப்பான் நோயை முற்றிலும் தடுக்கலாம். அதிக பூக்களையும் பெற்று காய்களும் அதிகரிக்கும். மேலும் செடியின் ஆயுட்காலமும் அதிகரிக்கும், மகசூலும் அதிகமாகும்.
- வெங்காயத்தில் நுனி காய்கள் வளராது.
- முருங்கைக்கு இந்த கற்பூர கரைசலை தெளிப்பதால் பூக்கள் அதிகரித்து இருபது நாட்களில் காய்களை பறிக்கலாம்.
- காய்கறி செடிகளுக்கு தெளிப்பதால் நோய்கள், பூச்சிகள் கட்டுப்படும், நல்ல மகசூலை அளிக்கும்.
- எள், உளுந்து பயிர்களுக்கு இரண்டு மூன்று முறை தெளிப்பதால் செடிகள் நன்றாக வளர்ந்து பூக்கள், காய்கள் அதிகரிக்கும்.
- நெல் பயிரில் புகையான் உட்பட அனைத்து நோய்களையும் கட்டுபடுத்தலாம்.
- வாழைக்கு தெளிப்பதால் அனைத்து நோய்களும் கட்டுப்படும்.
இந்த கற்பூர கரைசல் பூச்சி விரட்டியாக மட்டுமில்லாது சிறந்த உரமாகவும் செயல்படுகிறது. விவசாயம் செய்பவர்களும் மாடித் தோட்டம், வீட்டுத் தோட்டம் வைத்திருப்பவர்களும் தேவைக்கு ஏற்ப உடனடியாகத் தயாரித்துக்கொள்ளலாம். சேமித்து வைத்து பயன்படுத்த கூடாது, அதாவது வீரியம் இருக்காது.
குறிப்புகள்
கற்பூர கரைசல் பயிர்களுக்கு மிகச்சிறந்த பயிர் வளர்ச்சி ஊக்கி. இந்த கரைசலை பயிர்களுக்கு தெளிப்பதால் பயிர்களின் வளர்ச்சி நன்றாக இருக்கும். மகசூலும் நன்றாக இருக்கும்.அனைத்து வகை பயிர்களுக்கும் மிக சிறந்த பூச்சி கொல்லியாக பயன்படுகிறது.
மேமேலும் எளிமையாக தயாரித்து பயன்படுத்தக்கூடிய பல இயற்கை உரம் மற்றும் இயற்கை பூச்சி விரட்டிகளை தெரிந்துகொள்ள இங்கு இணையவும் – இயற்கை உரம், பூச்சி விரட்டி.