கரிசலாங்கண்ணி கீரை அதிக மருத்துவ குணம் கொண்ட ஒரு கீரை வகை. கரிசலாங்கண்ணியில் இரண்டு சத்துக்கள் உள்ளன ஒன்று தங்கச் சத்து மற்றொன்று இரும்புச்சத்து. இந்த இரண்டு அபூர்வமான சத்துக்கள் இந்த கீரையில் மட்டும் தான் அமைந்துள்ளது. உடல் உஷ்ணம், சளி, பித்தம் நீக்கும் ஜூஸ். கண்களில் ஏற்படும் தொந்தரவுகள் நீங்கும் சிறந்த கீரை கரிசலாங்கண்ணி கீரை. இந்த கீரையில் அவ்வப்பொழுது ஜூஸ் தயாரித்து பருக நல்ல பலனை பெறலாம். பல நேரங்களில் இந்த கீரை கிடைக்கப் பெறாமல் இருப்பதால் அதற்கு பதில் கரிசாலை பொடியை பயன்படுத்தலாம். அதனால் கரிசாலை பொடியைக் கொண்டும் மிக சுலபமாக ஜூஸ் தயாரித்தும் பருகலாம். இந்த கரிசாலை ஜூஸ் காலையில் பருக சிறந்தது.
தேவையான பொருட்கள்
- 2 ஸ்பூன் கரிசலாங்கண்ணிப் பொடி
- 2 சிட்டிகை சீரகத் தூள்
- 4 ஸ்பூன் வெல்லம்/ நாட்டு சர்க்கரை
- 1 கப் தேங்காய்ப் பால்
செய்முறை
- கரிசலாங்கண்ணிப் பொடி, சீரகத் தூள், வெல்லம்/ நாட்டு சர்க்கரை ஆகியவற்றை ஒன்றாக கலந்து சிறிது தண்ணீர் ஊற்றி சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும்.
- சிறிது நேரம் கழித்து வடிகட்டி தேங்காய்ப் பாலுடன் கலந்து சாப்பிடவும்.
- சத்தான கரிசலாங்கண்ணி ஜூஸ் தயார்.
கரிசலாங்கண்ணி ஜூஸ்
உடல் உஷ்ணம், சளி, பித்தம் நீக்கும் ஜூஸ். கண்களில் ஏற்படும் தொந்தரவுகள் நீங்கும். காலையில் பருக சிறந்தது.
தேவையான பொருட்கள்
- 2 ஸ்பூன் கரிசலாங்கண்ணிப் பொடி
- 2 சிட்டிகை சீரகத் தூள்
- 4 ஸ்பூன் வெல்லம்/ நாட்டு சர்க்கரை
- 1 கப் தேங்காய்ப் பால்
செய்முறை
- கரிசலாங்கண்ணிப் பொடி, சீரகத் தூள், வெல்லம்/ நாட்டு சர்க்கரை ஆகியவற்றை ஒன்றாக கலந்து சிறிது தண்ணீர் ஊற்றி சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும்.
- சிறிது நேரம் கழித்து வடிகட்டி தேங்காய்ப் பாலுடன் கலந்து சாப்பிடவும்.
- சத்தான கரிசலாங்கண்ணி ஜூஸ் தயார்.