கானா வாழை கீரை – நம் கீரை அறிவோம்

Commelina benghalensis; கானா வாழை கீரை

தமிழகத்தில் பெரும்பாலும் அதிக இடங்களில் பார்க்கக் கூடியது ஒரு கீரை வகை இந்த கானாம் வாழை கீரை. தமிழகத்தில் ஈரப்பதம் அதிகம் இருக்கக்கூடிய இடங்களில் அதிகமாக விளையக் கூடிய ஒருவகை கீரை. எல்லா காலங்களிலும் இந்த கீரையை பார்க்க முடியும்.

பெரிய மரங்களின் நிழல்களிலும் அதிகமாக காணப்படக்கூடிய ஒரு வகை கீரை. கால்வாய்கள், குளங்கள், வயல்களிலும் ஓரங்களிலும் முளைத்து இருக்கக்கூடியது. தரையில் படரக்கூடிய ஒரு சிறு கொடி இனத்தை சேர்ந்தது தான் இந்த கானாம் வாழை கீரை. இதன் இலைகள் பச்சை நிறமாகவும் மத்தியில் அகன்றும் வாய் பகுதியில் குருகியுமிருக்கும். நடுவில் நரம்பு இருக்கும். வாழை இலை போன்று இருக்கும். நீல நிறமாக சிறிய புஷ்பங்கள் புஷ்பித்தும் காய் காய்க்கும்.

கிராமப்புறங்களில் கோழிக் கானான், செப்புக் குடத்துக் கீரை என்றும் கூறுவதுண்டு. இதனுடைய விதைகள் ஒரு குடத்தை போன்ற சிறிது நீர் கொண்டுள்ளதாகும் இருக்கும். இதன் இலையை பருப்பு சேர்த்து சமைத்து சாப்பிடலாம். பல வகை கீரைகளுடன் சேர்த்து சாப்பிடலாம். இது கீரை வகையைச் சேர்ந்தது என்றாலும் காய்ச்சல் நோய்க்கு மிக சிறந்த மூலிகையாகவும் உள்ளது.

தாது விருத்தி உண்டாக இந்த கானா கோழிக் கீரை என்றும் கூறப்படும் இந்த கானா வாழைக் கீரையைக் கைப்பிடி அளவு முருங்கைப் பூவையும் பருப்பு சேர்த்து கூட்டு வைத்து நெய் சேர்த்து சாதத்துடன் தொடர்ந்து 21 நாள் சாப்பிட்டு வந்தால் தாது விருத்தியாகும் உடலில் நல்ல ரத்தம் உற்பத்தியாகும். ஆண்மை குறைவுக்கு ஒரு அற்புதமான கீரை.

(3 votes)