கம்பு காய்கறி கஞ்சி / Bajra / Pearl Millet Vegetable Porridge

கம்பில் புரொட்டின் சத்து உள்ளது. தானிய வகைகளில் (அரிசி, கோதுமையும் சேர்த்து) விட்டமின் ‘A’ மற்றும் folic acid அதிகம் உள்ளது கம்பில் தான். கம்பில் இரும்பு சத்தும், பீட்டா கரோட்டீன் சத்தும் அதிகம் உள்ளது. இது நம் உடம்பு பீட்டா கரோட்டீனை, விட்டமின் ‘A’ சத்தாக மாற்றும். எனவே பீட்டா கரோட்டீனை, விட்டமின் ‘A’ க்கான ஆதாரம் எனலாம். நம் தோல் ஆரோக்கியத்திற்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும், கூர்மையான பார்வைக்கும் விட்டமின் ‘A’ அவசியம். நார்ச் சத்து, விட்டமின் ‘B’, விட்டமின் ‘E’, கால்சியம் மற்றும் மக்னீசியம் சத்தும் கம்பில் அதிகம். கொழுப்பைக் கரைக்கக் கூடியது.

Nattu Kambu, kambu upma recipe in tamil, pearl millet recipe, nattu kambu upma, upma recipe in tamil, kambu recipe, millet recipe in tamil

பொதுவாக கம்பு என்றவுடன் அனைவரின் நினைவிலும்  வருவது  கம்பங் களியும் கம்பங் கூழும் தான்.  அவை மட்டும் தானா,  இந்த நாட்டுக் கம்பில் விதவிதமான சுவையான பல பாரம்பரிய மற்றும் நவீன உணவுகளையும் தயாரிக்கலாம். கம்பு இட்லி, கம்பு தோசை, கம்பு அடை, கம்பு உப்புமா, கம்பு புட்டு, கம்பு வடை, கம்பு சட்னி என்று பல பல காரவகைகளில் தொடங்கி கம்பு சாதம், கம்பு பிஸிபேளாபாத், கம்பு தயிர் சாதம், கம்பு பிரியாணி என கம்பில் செய்யும் உணவுகளை பட்டியல் இட்டுக்கொண்டே போகலாம். இந்த வரிசையில் நாம் கம்பை வைத்து எவ்வாறு எளிமையான காய்கறி கஞ்சி செய்வது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

  • ½ கப் நாட்டு கம்பு
  • ஒரு சிட்டிகை மஞ்சள் தூள்
  • ½ ஸ்பூன் மிளகு
  • ½ ஸ்பூன் சீரகம்
  • 2 ஏலக்காய்
  • 1 பிரிஞ்சி இலை

  • 1 கப் கேரட், பீன்ஸ் (சிறிதாக நறுக்கியது)
  • 3 ஸ்பூன் நல்லெண்ணெய்
  • 3 பல் பூண்டு
  • சிறிது கருவேப்பிலை
  • உப்பு
  • ½ மூடி எலுமிச்சைப்பழம்
  • சுவைக்கேற்ப மிளகுத் தூள்

செய்முறை

  • நாட்டுக் கம்பை நன்றாகச் சுத்தம்செய்து இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும்.
  • ஊறவைத்த கம்பினை மிக்ஸ்யில் குருணையாக உடைத்துக்கொள்ளவும்.
  • இதனுடன் காய்கறிகள், சீரகம், மிளகு, ஏலக்காய், பிரிஞ்சி இலை, மஞ்சள் தூள் மற்றும் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும்.
  • பிரிஞ்சி இலையை எடுத்துவிட்டு ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு பூண்டு, கருவேப்பிலை சேர்த்துத் தாளித்து சூப் கலவையில் சேர்த்துக் கொதிக்கவிடவும்.
  • தேவைப்பட்டால், சிறிது தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும்.
  • இதில், எலுமிச்சைப் பழச்சாறு, உப்பு, மிளகுத் தூள் சேர்த்துப் பரிமாறவும்.
  • சுவையான கம்பு காய்கறி கஞ்சி தயார்.

கம்பு காய்கறி கஞ்சி

கம்பில் புரொட்டின் சத்து உள்ளது. தானிய வகைகளில் (அரிசி, கோதுமையும் சேர்த்து) விட்டமின் 'A' மற்றும் folic acid அதிகம் உள்ளது கம்பில் தான். கம்பில் இரும்பு சத்தும், பீட்டா கரோட்டீன் சத்தும் அதிகம் உள்ளது. இது நம் உடம்பு பீட்டா கரோட்டீனை, விட்டமின் 'A' சத்தாக மாற்றும். எனவே பீட்டா கரோட்டீனை, விட்டமின் 'A' க்கான ஆதாரம் எனலாம். நம் தோல் ஆரோக்கியத்திற்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும், கூர்மையான பார்வைக்கும் விட்டமின் 'A' அவசியம். நார்ச் சத்து, விட்டமின் 'B', விட்டமின் 'E', கால்சியம் மற்றும் மக்னீசியம் சத்தும் கம்பில் அதிகம். கொழுப்பைக் கரைக்கக் கூடியது.
பொதுவாக கம்பு என்றவுடன் அனைவரின் நினைவிலும்  வருவது  கம்பங் களியும் கம்பங் கூலும் தான்.  அவை மட்டும் தானா,  இந்த நாட்டுக் கம்பில் விதவிதமான சுவையான பல பாரம்பரிய மற்றும் நவீன உணவுகளையும் தயாரிக்கலாம். கம்பு இட்லி, கம்பு தோசை, கம்பு அடை, கம்பு உப்புமா, கம்பு புட்டு, கம்பு வடை, கம்பு சட்னி என்று பல பல காரவகைகளில் தொடங்கி கம்பு சாதம், கம்பு பிஸிபேளாபாத், கம்பு தயிர் சாதம், கம்பு பிரியாணி என கம்பில் செய்யும் உணவுகளை பட்டியல் இட்டுக்கொண்டே போகலாம். இந்த வரிசையில் நாம் கம்பை வைத்து எவ்வாறு எளிமையான காய்கறி கஞ்சி செய்வது என்று பார்ப்போம்.
ஆயத்த நேரம் : – 2 hours
சமைக்கும் நேரம் : – 30 minutes
மொத்த நேரம் : – 2 hours 30 minutes

தேவையான பொருட்கள்

  • ½ கப் நாட்டு கம்பு
  • ஒரு சிட்டிகை மஞ்சள் தூள்
  • ½ ஸ்பூன் மிளகு
  • ½ ஸ்பூன் சீரகம்
  • 2 ஏலக்காய்
  • 1 பிரிஞ்சி இலை
  • 1 கப் கேரட், பீன்ஸ் (சிறிதாக நறுக்கியது)
  • 3 ஸ்பூன் நல்லெண்ணெய்
  • 3 பல் பூண்டு
  • சிறிது கருவேப்பிலை
  • உப்பு
  • ½ மூடி எலுமிச்சைப்பழம்
  • சுவைக்கேற்ப மிளகுத் தூள்

செய்முறை

  • நாட்டுக் கம்பை நன்றாகச் சுத்தம்செய்து இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும்.
  • ஊறவைத்த கம்பினை மிக்ஸ்யில் குருணையாக உடைத்துக்கொள்ளவும்.
  • இதனுடன் காய்கறிகள், சீரகம், மிளகு, ஏலக்காய், பிரிஞ்சி இலை, மஞ்சள் தூள் மற்றும் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும்.
  • பிரிஞ்சி இலையை எடுத்துவிட்டு ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு பூண்டு, கருவேப்பிலை சேர்த்துத் தாளித்து சூப் கலவையில் சேர்த்துக் கொதிக்கவிடவும்.
  • தேவைப்பட்டால், சிறிது தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும்.
  • இதில், எலுமிச்சைப் பழச்சாறு, உப்பு, மிளகுத் தூள் சேர்த்துப் பரிமாறவும்.
  • சுவையான கம்பு காய்கறி கஞ்சி தயார்.