கம்பு தானியத்தில் அதிகமான அளவில் புரதம், கால்சியம், பாஸ்பரம், இரும்புச் சத்து, ரைபோபுளோவின், நயாசின் சத்துக்கள், வைட்டமின்கள், தாது உப்புகள் , மாவுச்சத்து, பி 11 வைட்டமின், கரோட்டின், லைசின் போன்ற அமிலங்கள் என பல உயிர்ச்சத்துகள் உள்ளதால் உணவுச்சத்து தரத்தில் முதலிடம் வகிக்கிறது.
வளரும் குழந்தைகளுக்கும் மாதவிடாய் துவங்கிய பெண் குழந்தைகளுக்கும் அடிக்கடி கம்பு உணவை சேர்க்க வேண்டும் .வேறு எந்தத் தானியத்திலும் இல்லாத அளவு 5 சதவிகிதம் எண்ணெய் உள்ளது. இது உடலுக்கு மிகவும் உகந்த கொழுப்பு ஆகும். வேண்டாத கொழுப்புகளை கரைத்து உடல் எடையை குறைக்கும். சர்க்கரை நோயாளிக்கு கம்பு ஒரு வரப்பிரசாதம் ஆகும்.

வெப்ப நாடுகளில் வேலை செய்பவர்கள், வெயிலில் அதிகம் அலைபவர்கள், அதிக சூடுடைய இயந்திரங்களில் வேலை பார்ப்பவர்கள், இரவு நேர வேலையில் இருப்பவர்கள், நீண்ட நேரம் ஒரே இடத்தில அமர்ந்து வேலை பார்ப்பவர்கள், அஜீரணக் கோளாறு, மலச்சிக்கல், வயிற்றில் புண்கள், குடல்புண், கடின வேலை செய்பவர்கள், எப்போதும் மன அழுத்தத்துடன் (நம்மில் பலர்) இருபவர்கள் போன்றோருக்கு உடல் அதிக உஷ்ணமும் சோர்வும் உண்டாகும். கம்பு உணவை காலை, மதிய வேளைகளில் உண்டு வந்தால் உடல் வலுவடைந்து உடல் சூடு குறையும்.

கம்பில் அல்புமின், கார்போஹைட்ரேட், சாம்பல் சத்து, நைட்ரஜன், சிலிகா மற்றும் ஏராளமான நார்ச்சத்துகள் அடங்கியுள்ளன. இவைகள் உடம்பில் எளிதில் செரிமானமாவதால் நீர்மச்சத்துள்ள கூழ் போன்றவைகளாக செய்து சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை உணவாக உட்கொள்ள முடிகிறது.
தேவையான பொருட்கள்
- 1 கப் நாட்டு கம்பு குருணை
- 3 கப் தண்ணீர்
- 2 கப் பசு மோர்
- 1 டீஸ்பூன் பொடியாக நறுக்கிய வெங்காயம்
- தேவையான அளவு இந்து உப்பு
செய்முறை
- நாட்டு கம்பை அரை மணி நேரம் ஊற வைத்து, நிழலில் காய வைக்கவும்.
- காய்ந்ததும் மிக்ஸியில் போட்டு பொடி செய்து சலித்து வைக்கவும். மாவாக இல்லாமல் லேசாக குருணையாகவும் இருக்கலாம்.
- அத்துடன் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, தோசை மாவு பதத்திற்கு கலந்து வைக்கவும். (ஒரு இரவு ஒரு பகல் அப்படியே வைக்கவும்).
- அடுத்த நாள் புளித்த கம்பு மாவுக் கலவையை தேவையான அளவு தண்ணீரில் கொஞ்சங் கொஞ்சமாக போட்டு கொதிக்க ஆரம்பித்ததும் கட்டி பிடிக்காதபடி கிளறி அரைமணி நேரம் இளந்தீயில் வேகவைத்து கூழ் பதத்தில் எடுக்க வேண்டும்.
- கம்பு வெந்ததும் அதை உருண்டைகளாக உருட்டி வைத்து, தேவைப்படும் போது ஒரு உருண்டை எடுத்து கரைக்கலாம்.
- சூடாக இருக்கும் போது சாதமாகவும் சாப்பிடலாம்.
- மீதமான கம்புருண்டைகளை தண்ணீரில் போட்டு வைக்க வேண்டும்.
- மண் சட்டியில் செய்தால் சுவைகூடும். கம்பங்கூழை தினம் தண்ணீர் மாற்றி 3 நாட்கள் வரை பயன்படுத்தலாம்.
- தேவைப்படும் பொது இத்துடன் தேவையான அளவிற்கு பசு மோர் கலந்தால் கம்பங்கூழ் தயார். சின்ன வெங்காயம் அல்லது மாங்காயுடன் உப்பு சேர்த்து அம்மியில் இடித்தெடுத்து, இந்தக் கூழுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
- கோடை காலத்திற்கு ஏற்ற காலை உணவு. உடலும் உள்ளமும் குளுரச் செய்யும்.

கம்பங்கூழ்
தேவையான பொருட்கள்
- 1 கப் நாட்டு கம்பு குருணை
- 3 கப் தண்ணீர்
- 2 கப் பசு மோர்
- 1 டீஸ்பூன் பொடியாக நறுக்கிய வெங்காயம்
- தேவையான அளவு இந்து உப்பு
செய்முறை
- நாட்டு கம்பை அரை மணி நேரம் ஊற வைத்து, நிழலில் காய வைக்கவும்.
- காய்ந்ததும் மிக்ஸியில் போட்டு பொடி செய்து சலித்து வைக்கவும்.
- மாவாக இல்லாமல் லேசாக குருணையாகவும் இருக்கலாம்.