கம்பு சோறு

முற்காலத்தில் நம் முன்னோர் அதிகம் பயன்படுத்திய சத்து மிகு தானியம் கம்பு (நாட்டு கம்பு). கம்பில் புரோட்டின் சத்து உள்ளது. தானிய வகைகளில் (அரிசி, கோதுமையும் சேர்த்து) வைட்டமின் ‘A’ மற்றும் folic acid அதிகம் உள்ளது கம்பில் தான். கம்பில் இரும்பு சத்தும், பீட்டா கரோட்டீன் சத்தும் அதிகம் உள்ளது.

இது நம் உடம்பு பீட்டா கரோட்டீனை, வைட்டமின் ‘A’ சத்தாக மாற்றும். எனவே பீட்டா கரோட்டீனை, வைட்டமின் ‘A’ க்கான ஆதாரம் எனலாம். நம் தோல் ஆரோக்கியத்திற்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும், கூர்மையான பார்வைக்கும் விட்டமின் ‘A’ அவசியம். நார்ச் சத்து, வைட்டமின் ‘B’, வைட்டமின் ‘E’, கால்சியம் மற்றும் மக்னீசியம் சத்தும் கம்பில் அதிகம். கொழுப்பைக் கரைக்கக் கூடியது.

மேலும் நாட்டுக் கம்பைப் பற்றி பல தகவல்களை தெரிந்து கொள்ள – நாட்டுக் கம்பு.

பொதுவாக கம்பஞ் சோறு என்று அனைவரும் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இந்த நாட்டு காம்பை எவ்வாறு சோறாக தயாரிப்பது என்று பலருக்கும் கேள்வி இருக்கும். எளிமையாக தயாரிக்கும் முறையைப் பார்ப்போம்.

நாட்டுக் கம்பு அரிசி

தேவையான பொருட்கள்

  • 1 கப் நாட்டுக் கம்பு
  • தண்ணீர்

செய்முறை

  • கம்பு சோறு செய்வதற்கு முதலில் தேவையான அளவு நாட்டுக் கம்பு எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • அதனை ஒரு மண்சட்டியில் வாசனை வர வறுத்துக் கொள்ளவும்.
  • பின் சற்று ஆறவிட்டு அதனை ஒரு அரை மணி நேரம் நீரில் ஊறவைக்கவும்.
  • பின் ஒரு மண்சட்டியில் மூன்று பங்கு தண்ணீர் ஊற்றி கொதிவந்தபின் ஊறிய முழு கம்பை சேர்க்கவும்.
  • நன்கு கொதி வந்த பின் அடுப்பை சிறு தீயில் வைக்கவும்.
  • சிறு தீயில் இருபது முதல் முப்பது நிமிடம் வேகவிடவும்.
  • நீரின் அளவை அவ்வப்பொழுது சரிபார்க்கவும்.
  • முப்பது நிமிடத்தில் கம்பரிசி சோறு நன்கு வெந்து தயாராகிவிடும்.
  • சுவையான நல்ல மணமான கம்பரிசி சோறுடன் காரக்குழம்பு, கூட்டும் பிரமாதமாக இருக்கும்.

கம்பு சோறு

முற்காலத்தில் நம் முன்னோர் அதிகம் பயன்படுத்திய சத்து மிகு தானியம் கம்பு (நாட்டு கம்பு).கம்பில் புரொட்டின் சத்து உள்ளது. தானிய வகைகளில் (அரிசி, கோதுமையும் சேர்த்து) விட்டமின் 'A' மற்றும் folic acid அதிகம் உள்ளது கம்பில் தான். கம்பில் இரும்பு சத்தும், பீட்டா கரோட்டீன் சத்தும் அதிகம் உள்ளது.
இது நம் உடம்பு பீட்டா கரோட்டீனை, விட்டமின் 'A' சத்தாக மாற்றும். எனவே பீட்டா கரோட்டீனை, விட்டமின் 'A' க்கான ஆதாரம் எனலாம். நம் தோல் ஆரோக்கியத்திற்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும், கூர்மையான பார்வைக்கும் விட்டமின் 'A' அவசியம். நார்ச் சத்து, விட்டமின் 'B', விட்டமின் 'E', கால்சியம் மற்றும் மக்னீசியம் சத்தும் கம்பில் அதிகம். கொழுப்பைக் கரைக்கக் கூடியது.
பொதுவாக கம்பஞ் சோறு என்று அனைவரும் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இந்த நாட்டு காம்பை எவ்வாறு சோறாக தயாரிப்பது என்று பலருக்கும் கேள்வி இருக்கும். எளிமையாக தயாரிக்கும் முறையைப் பார்போம்.
ஆயத்த நேரம் : – 20 minutes
சமைக்கும் நேரம் : – 30 minutes
மொத்த நேரம் : – 50 minutes
பரிமாறும் அளவு : – 2

தேவையான பொருட்கள்

  • 1 கப் நாட்டுக் கம்பு
  • தண்ணீர்

செய்முறை

  • கம்பு சோறு செய்வதற்கு முதலில் தேவையான அளவு நாட்டுக் கம்பு எடுத்துக் கொள்ளவேண்டும்.
  • அதனை ஒரு மண்சட்டியில் வாசனை வர வறுத்துக் கொள்ளவும்.
  • பின் சற்று ஆறவிட்டு அதனை ஒரு அரை மணி நேரம் நீரில் ஊறவைக்கவும்.
  • பின் ஒரு மண்சட்டியில் மூன்று பங்கு தண்ணீர் ஊற்றி கொதிவந்தபின் ஊறிய முழு கம்பை சேர்க்கவும்.
  • நன்கு கொதிவந்த பின் அடுப்பை சிறுதீயில் வைக்கவும்.
  • சிறுதீயில் இருபது முதல் முப்பது நிமிடம் வேகவிடவும்.
  • நீரின் அளவை அவ்வப்பொழுது சரிபார்க்கவும்.
  • முப்பது நிமிடத்தில் கம்பரிசி சோறு நன்கு வெந்து தயாராகிவிடும்.
  • சுவையான நல்ல மணமான கம்பரிசி சோறுடன் காரக்குழம்பு, கூட்டும் பிரமாதமாக இருக்கும்.
(2 votes)