பொங்கல் என்றதும் நாம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது ஒன்று தை திருநாள் மற்றொன்று பொங்கல் உணவு.
இந்த இரண்டுமே ஒருசேர வரக்கூடிய பொங்கல் திருநாளை இயற்கையோடு கொண்ட உதவும் அற்புதமான ஒரு பாரம்பரிய அரிசி என்றால் அது கம்பஞ் சம்பா அரிசி. இனி பொங்கல் என்றதும் நமக்கு இந்த கம்பஞ் சம்பா அரிசியும் நினைவிற்கு வரும். அவ்வளவு சுவையான பாரம்பரிய அரிசி இந்த கம்பஞ் சம்பா அரிசி. பொங்கல் அரிசி என்ற இந்த அரிசியை கூறினால் கூட அது மிகையாகாது.
இயற்கையை வணங்கி நம்மை வாழவைக்கும் சக்திகளை கொண்டாடும் திருவிழாவான பொங்கல் திருநாளுக்கு இயற்கையான நம் பாரம்பரிய அரிசியைக் கொண்டு பொங்கலிட்டு கதிரவனுக்குப் படைப்பது, ஆதவனுக்கு நாம் செய்யும் நன்றி கடன் ஆகும்.
சுழன்று கொண்டிருக்கும் இந்த உலகில் சுழன்று கொண்டிருக்கும் நமக்கு உணவளிக்கும் விவசாயிக்கும், கதிரவனுக்கும், இந்த மண்ணிற்கும், நீருக்கும், பசுவிற்கும் நன்றி கூறும் ஒரு அற்புதமான திருநாள் பொங்கல் திருநாள். இந்த பொங்கல் திருநாளில் பொதுவாக புதிதாக அறுவடை செய்த பச்சரிசி பயன்படுத்தது நம் பழக்கம். அதற்கு ஏற்ற சிறந்த அரிசி கம்பஞ் சம்பா அரிசி. பொங்கலுக்கு நல்ல ஒரு ருசியையும் நல்ல ஒரு மணத்தையும் அளிக்கும் அரிசி இது.
நூறு ஆண்டுகளுக்கு முன் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரிசியை கொண்ட நம் தமிழகத்தில் குழந்தை பிறந்தால் ஒரு அரிசி, பெண்களுக்கு ஒரு அரிசி, ஆண்களுக்கு ஒரு அரிசி, உப்பு மண்ணிற்கு ஒரு அரிசி, மலைக்கு ஒரு அரிசி, வெள்ளத்திற்கு ஒரு அரிசி என ஒவ்வொன்றிற்கும், ஒவ்வொரு விழாவிற்கும் அரிசியை நம் முன்னோர்கள் பயன்படுத்தி ஆரோக்கியமான வாழ்ந்தனர்.
அப்பேர்ப்பட்ட பாரம்பரியத்தை கொண்டிருக்கும் நம் தமிழகத்தில் பொங்கல் திருநாளுக்கு என்று உகந்த ஒரு அரிசியாக நம் முன்னோர்கள் தேர்ந்தெடுத்து வைத்திருந்த அரிசிகளில் ஒன்றுதான் இந்த கம்பஞ் சம்பா அரிசி. பார்க்க சீரகசம்பா போலவே சன்னரக அரசியான இந்த கம்பன் சம்பா அரிசியில் சர்க்கரை பொங்கலும், வெண்பொங்கலும் அமிர்தமாக இருக்கும்.
பொங்கலுக்கு ஏற்ற சுவை, குழைவு, மணம், பக்குவத்தையும் அளிக்கக்கூடிய ஒரு சிறந்த ரகம் இந்த கம்பஞ் சம்பா அரிசி. தமிழகத்தில் தில்லையை ஒட்டியிருக்கக்கூடிய பகுதியை பூர்வீகமாக கொண்ட பாரம்பரிய அரிசி இது.
தமிழகத்தில் இருக்கும் அனைத்து மண்ணிற்கும் ஏற்ற ஒரு ரகம். களிமண்ணில் சிறப்பாக விளையும் தன்மை கொண்டது. பொதுவாக இதனை ஆடியில் விதைத்து தை மாத பொங்கலுக்கு கிடைக்கும் அரிசியாக உள்ளது. தமிழகத்தில் சிறப்பாக விளையக்கூடிய ஒரு வெள்ளை நிற அரிசியாகவும் இந்த அரிசி உள்ளது.
நான்கு மாதங்கள் விளையக்கூடிய இந்த பாரம்பரிய அரிசி 5 அடி வரை உயரம் வளரக் கூடியதாகவும் உள்ளது. இந்த அரிசிக்கு கவிச்சக்ரவர்த்தி கம்பனின் நினைவாக கம்பன் சம்பா என்று பெயர்வந்துள்ளது. நெல் உமியை விட்டு நீக்கிய இந்த அரிசியின் நிறம் வெண்சாம்பல் நிறத்தில் இருக்கும்.