நம்ம கடை
Shop Here for Green Gifts
கல்லுருண்டையான் அரிசி பலகரங்களுக்கு ஏற்ற ஒரு ரகம். பலகாரங்கள் சுவைக்கவேண்டுமானால் இந்த அரிசியை பயன்படுத்த சிறந்த பலனை அளிக்கும். பொதுவாக காவேரி நீரில் விளையும் இந்த அரிசியின் சுவை அலாதியானது. காவேரி நீரில் விளையும் நெல்லுக்கு ஒரு தனி சுவையும், மனமும், குணமும் இருக்கத்தானே செய்யும்.

கல்லுண்டையான் என்ற அரிசியின் பெயரை ஒத்த பெயரில் இருக்கும் மற்ற பாரம்பரிய அரிசிகள் இரண்டு உள்ளன. அவை கல்லுண்டைச் சம்பா மற்றும் கல்லுண்டை அரிசி அதனால் இதற்கு ஓத பெயரில் இருக்கும் மற்ற அரிசியை சேர்த்து குழப்பிக்கொள்ள வேண்டாம். ஒவ்வொன்றும் அதன் நிறங்களிலும் அடர்த்தியிலும் ஓரளவு ஒத்து இருந்தாலும் இந்த மூன்று அரிசிகளும் வளரும் வளர்ச்சிக் காலம் வேறாக உள்ளது.

இந்த கல்லுருண்டையான் அரிசியை கல்லுருண்டை என்றும் குறிப்பிடுவதுண்டு. இது நூற்றி இருபது நாள்கள் வயதுடைய நெல். இட்லி, தோசை, இடியாப்பம், கொழுக்கட்டை என பல வகை உணவுகளையும் தயாரித்து உண்ண சுவையாக இருக்கும். அதிலும் குறிப்பாக இனிப்பு பலகரங்களுக்கு பிரமாதமான சுவையை கொடுக்கும் அரிசி.
நார்சத்துக்கள், வைட்டமின் சத்துக்கள், தாது சத்துக்கள், புரதம், கொழுப்பு என உடல் ஆரோக்கியத்திற்கு அவசியமான பல சத்துகள் நிறைந்த சிறந்த அரிசி இந்த கல்லுருண்டையான் அரிசி. நீரிழிவு, உடல் பருமன், மலச்சிக்கல், குழந்தையின்மை, இரத்த சோகை, இருதய நோய்கள் போன்ற தொந்தரவுகளுக்கு சிறந்த அரிசி இந்த மோட்ட ரக சிகப்பரிசி.

இந்த சிகப்பு நிற கல்லுருண்டையான் அரிசியில் தயாரிக்கக் கூடிய இனிப்பு வகைகள் கூடுதல் சுவையையும் மணத்தையும் அளிக்கக் கூடியது. குறிப்பாக இந்த அரிசியில் தயாரிக்கப்படும் அதிரசம் அபாரமான சுவையைத் தரும். நமது முன்னோர்கள் ஒவ்வொரு அரிசியையும் பிரதானமாக சில உணவுகளை தயாரிக்க பயன்படுத்தினர். அந்த வகையில் பலகரங்களுக்கும், இனிப்பு வகைகளுக்கும் சிறந்த இந்த அரிசி அதிரசம் தயாரிக்க நமக்கு முந்தைய தலைமுறையினர் பயன்படுத்திய அரிசி.