கலவை கீரை – நம் கீரை அறிவோம்

இது ஒரு தனியான கீரை அல்ல. எல்லா கீரைகளின் கலவை தான் கலவை கீரை எனப்படும். பொதுவாக கலவைக் கீரையில் சத்துக்கள் நிறைந்த முளைக்கீரை, மூக்கரட்டை கீரை, அரைக்கீரை, புளிச்சக் கீரை, பசலைக் கீரை போன்ற கீரைகளை கலந்திருக்கும்.

கிராமங்களில் அந்த பகுதியில் சாதாரணமாக வயல் வெளியில் விளைந்திருக்கும் கீரைகளை கிள்ளி பயன்படுத்துவார்கள். அதனையே கலவைக் கீரை என்பதுண்டும். மூக்கிரட்டை, கீழாநெல்லி, குப்பை கீரை, முள்ளி கீரை, துத்தி கீரை, துயிலிக் கீரை எனப்படும் சுண்ணாம்பு கீரை, காட்டு சிறுகீரை, தும்பை, திராய் கீரை, சாரணை, குமுட்டி கீரை என பல கீரைகளை, அதாவது கிடைக்கும் கீரைகளை கலைவையாக சேர்த்து செய்வது கலவைக் கீரை.

பல கீரைகள் சேர்ந்திருப்பதால் இது நல்ல ருசியாக இருக்கும். இதனை ருசியாக தயாரித்தும் உண்பார்கள். அடிக்கடி இவ்வாறு கிடைக்கும் கீரைகளை உணவில் சேர்த்துக்கொண்டால் மூளைக்கு பலம் தரும். இருதயத்தை வலிமைப்படுத்தும்.

இந்த கலவைக் கீரையை உண்பதால் வாத நோய்கள் நீங்கும். பித்தம் சம்பந்தமான நோய்கள் அகன்றுவிடும். சத்துக்கள் நிறைந்த கீரைகள் கலந்துள்ளதால் இதை சாப்பிடுவதால் இரத்தம் சுத்தமாகும். கல்லீரல், மண்ணீரல், ஜீரணப்பை போன்றவை பலம் பெறும். ஜலதோஷத்தினால் உண்டாகும் கபக் கட்டு நீங்க இந்த கீரை பயன்படும்.

(1 vote)