இந்தியில் ‘காலா’ என்றால் கருப்பு, ‘நமக்’ என்றால் உப்பு என்று அர்த்தம். பொன்னிற அரிசியான இந்த காலாநமக் கருப்பு நிற நெல்லைக் கொண்டது. பல தாது உப்புக்களை கொண்டது இந்த காலா நமக் கருப்பு நிற நெல்.
பொன்னிற அரிசியான இந்த காலாநமக் அரிசியினை எளிதாக அன்றாட உணவிற்கு பயன்படுத்தலாம். பலகாரங்கள், கலவை சாதம், பிரியாணி, புலாவ், சாம்பார், ரசம் என அனைத்திற்கும் ஏற்றது.
தாது உப்புக்கள், நார்ச்சத்து, புரதம், வைட்டமின் சத்துக்களும் இந்த அரிசியில் உள்ளது.
காலா நமக் அரிசியைப் பற்றியும் அதன் பயன்கள், சத்துக்கள், நன்மைகளைப் பற்றியும் தெரிந்துக் கொள்ள இங்கு இணையவும். – காலா நமக் அரிசி.
தேவையான பொருட்கள்
- ½ கப் காலா நமக் அரிசி
- 2 -3 ஸ்பூன் மாதுளை முத்துக்கள்
- 2 -3 ஸ்பூன் ஆப்பிள்
- 2 -3 ஸ்பூன் திராட்சைப் பழம்
- 10 முந்திரி
- 10 உலர்ந்த திராட்சை
- 2 வெங்காயம்
- சிறிது பட்டை
- 2 லவங்கம்
- 1 ஏலக்காய்
- சிறிதளவு குங்குமப்பூ
- 4 ஸ்பூன் பசும் பால்
- செக்கு கடலை எண்ணெய்
- இந்து உப்பு
செய்முறை
- முதலில் காலா நமக் அரிசியினை ஒரு கப் தண்ணீர் சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும்.
- பசும் பாலில் குங்குமப்பூவை ஊற வைக்கவும்.
- வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும்.
- வாணலியில் கடலை எண்ணெயை சேர்த்து பட்டை, லவங்கம், ஏலக்காய் தாளித்து, முந்திரி, உலர்ந்த திராட்சை சேர்த்து வறுக்கவும்.
- இதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், இந்து உப்பு, பாலில் ஊற வைத்த குங்குமப்பூ சேர்த்து வதக்கி உதிர வேகவைத்த காலா நமக் சாதம், மாதுளை முத்துக்கள், ஆப்பிள், திராட்சையை சேர்த்துக் கிளறி இறக்கவும்.
- எளிதான இந்த காலா நமக் காஷ்மீரி புலாவ் சுவையிலும் மனதிலும் அபாரமாக இருக்கும்.
- குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பார்கள்.
காலா நமக் காஷ்மீரி புலாவ்