Welcome to HealthnOrganicsTamil !!!

காலா நமக் அரிசி – நம் பாரம்பரிய அரிசி

இந்தியில் ‘காலா’ என்றால் கருப்பு, ‘நமக்’ என்றால் உப்பு என்று அர்த்தம். பொன்னிற அரிசியான இந்த காலாநமக் கருப்பு நிற நெல்லைக் கொண்டது. பல தாது உப்புக்களை கொண்டது இந்த காலா நமக் கருப்பு நிற நெல்.

2000 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் சைவம், வைணவம், சமணம், புத்தம் என்று மதங்கள் போட்டி போட்டுக்கொண்டு தங்களின் கருத்துகளையும்,  கொள்கைகளையும் உலகிற்கு பரப்புரையாற்றிய காலம்.

ஞானிகளும் துறவிகளும் தங்களின் அனுபவங்களையும் அறிவையும் கொண்டு வாதிட்ட காலம் அது. எந்த பிரத்தியேக தொழில் நுட்பமும் இல்லாத தருணம் அவை. அதற்காக எந்த விதத்திலும் குறைந்தவர்கள் இல்லை அந்த காலத்து மனிதர்கள். 

இன்று வாழ்க்கையை வாழும் அனைவருக்கும் உள்ளுக்குள் பல கேள்விகள் இருந்துகொண்டு தான் இருக்கிறது. எதற்காக இந்த வாழ்க்கை? எதை நோக்கியது இந்த வாழ்க்கை? நடப்பதெற்கெல்லாம் காரணங்கள் என்ன? என்பது போன்ற பல கேள்விகளை சுமந்த வண்ணம்.

இப்படியான பல கேள்விகளை அன்றைய மக்களும் சுமந்திருந்தனர். ஆனால் அதற்கான விடையை பலர் அறிந்தும் இருந்தனர். இன்றோ கேள்விகளுடன் பல குழப்பங்கள், மன சுமைகள், போராட்டங்கள் என்று ஓடுகின்றனர்.

எந்த பெரிய தொழில் நுட்பமும் தகவல் சாதனங்களும் இல்லாதிருந்தாலும் அவர்கள் கோள்கள், வான சாஸ்திரங்கள், பூமி, உடல், உயிர், வாழ்க்கை என பலவற்றைப் பற்றிய தெளிவான தகவல்களை கொண்டிருந்தனர்.

இது மட்டுமல்லாது புஷ்ப விமானம் போன்றவற்றை பயன்படுத்தியதாகவும் செய்திகள் உள்ளது. எது இருந்ததோ இல்லையோ இன்னமும் இன்றைய அறிவியல் விடைகாணாத பலவற்றிற்கு விடைகள் அவர்களிடம் அன்று இருந்தது. அவற்றின் விளக்கங்கள் பல ரகசியங்களாகவும், இயற்கை பேரழிவுகளாலும் காணாமல் போனது தான் இன்றைய அவநம்பிக்கைகள் பலவற்றிற்கு காரணங்கள்.

அதிலும் மதங்களையும், கொள்கைகளையும் அன்று முன்னிறுத்தியவர்கள் தங்களின் கருத்துக்களுக்கு தெளிவான விளக்கங்களையும் அவற்றின் செயல் முறை எண்ணங்களையும் கொண்டிருந்தனர்.

ஒவ்வொரு கருத்தையும் வெளிப்படுத்திய அவர்கள் அந்த கருத்துகளுக்கு ஏற்ப தெளிவான உணர்வுகளையும் மற்றவர்கள் மத்தியில் வெளிப்படுத்தியது தான் அவர்களின் உண்மையான ஞான நிலையாக இருந்தது.

ஞானம், இன்று ஒரு கேலிக்கை ததும்பிய வார்த்தையாக இருக்கிறது. எதாவது ஒரு கருத்தை சிறுபிள்ளை தானமாக ஒருவர் கூற மற்றவர்கள் ஞானம், அறிவு என்றெல்லாம் கிண்டலடிப்பது தான் நமக்கு தெரிந்த ஞானம்.

கண்கள் உடலில் அதாவது முகத்தில் இருக்க வெளியுலகை பார்க்க பயன்படுகிறது. அதே கண்களை சற்று மூடி உட்கார்ந்தால் வெளியுலகமும் தெரிவதில்லை உள்ளிருக்கும் உடலின் பாகங்களும் தெரிவதில்லை அதனால் இவ்வாறுதான் ஞானத்தை கேலிசெய்வோம்.

அன்று வந்த சமயத் துறவிகள் பலர் தங்களை சுற்றியும், உலகை சுற்றியும், பிரபஞ்சத்தை சுற்றியும் நடக்கும் அனைத்தையும் ஒரே இடத்தில் உட்கார்ந்து கண்களை மூடிய வண்ணம் அறிந்து கொண்டனர். இதனை வெறும் ஞானம் என்று கூட கூறாது மெய்ஞ்ஞானம் என்றே கூறவேண்டும். 

வாழ்வதே பெரும் சுமையாக இன்று இருக்க ஞானமாவதும் மெய்ஞ்ஞானமாவதும் என்கிறீர்களா? வாழ்வை நகர்த்த ஒவ்வொன்றிற்கும் ஓடும் ஓட்டம் போதாது என்று உடலில் ஏற்படும் தொந்தரவுகள் வேறு இன்று அதிகரித்தே வருகிறது. ஞானமாவதும், அறிவாவதும்.. எந்த நேரம், எந்த நோய் இந்த நவீன உலகில் யாரைத் தாக்கும் என்ற பயமே ஒவ்வொருவரையும் மனத்தால் கொள்ளும் நிலையில் ஞானத்தைப் பற்றி என்ன சொல்வது என்பது தான் பலரின் எண்ணமாக இருக்கிறது. 

இப்படி நிதானமும் நிம்மதியும் இல்லாமல் ஓடுவதால் ஒன்றும் நடக்கப் போவதில்லை. ஞானமும், ஆரோக்கியமும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது. சீரான உடல் மற்றும் உள்ளத்தின் ஆரோக்கியம் தான் ஞானத்தை அளிக்க முடியும்.

உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு நல்ல ஆரோக்கியமான உணவு பெருந்துணையாக இருக்கும். அதுவும் சாத்வீக உணவு உடலை மட்டுமல்ல உள்ளத்தையும் நோய்கள் இன்றி பாதுகாக்கும். உடலும் மனமும் ஆரோக்கியம் நிறைந்திருக்க இயற்கையின் துணை ஒவ்வொருவரையும் அடையும்.

சாத்வீக உணவு நிறைந்த ஒருவர் முக்கோணத்தின் மூன்று முனைகள் போல மனம், உடல், இயற்கையின் ஒத்துழைப்பு கொண்டு ஞானத்தை எளிதாக அடையலாம். இன்றைய அவசர உலகின் வாழ்க்கையில் ஓட்டம் பிடிக்கும் நாம் எளிதாக உணவை கொண்டு பலவற்றை பெறலாம்.

உணவு என்றதும் ஒவ்வொருவரும் உண்பதை குறிப்பிடுவதாக நினைக்க வேண்டாம். உண்மையில் உணவு என்பது உடலுக்கும் மனதிற்கும் சக்தியையும், அமைதியையும் கொடுக்க வேண்டும்.

இன்று பலர் உணவை உண்ட மறு நிமிடமே சக்தியற்று ஒரு மயக்கத்தில் சற்று ஓய்வெடுக்கும் நிலை உள்ளது. பலர் என்று குறிப்பிட்டிருப்பதை அனைவரும் என்று கூட சொல்லலாம். காரணம் இன்று நாம் உண்ணும் உணவு உடலில் எளிதாக ஜீரணிக்காது உடலையும் உடலின் இயக்கத்தையும் மேலும் பலகீனப்படுத்துகிறது.

நல்ல ஆரோக்கியமான உணவை உட்கொள்ளும் பொழுது உடலும் மனமும் பிரபஞ்ச சக்தியான இயற்கையுடன் ஒன்றாக இணைந்து பலவற்றை அவரவர்களுக்கு அளிக்கிறது.

ஒவ்வொரு உணவையும் நாம் உண்ண அவற்றை உடல் ஜீரணிக்க பல தாதுப் பொருட்கள் தேவைப்படுகிறது. இந்த தாதுப் பொருட்களை சீராக உடலுக்கு கொடுக்க அபார சக்திகளை நாம் பெறலாம். அபார சக்தி என்றதும் ஏதோ அந்தரத்தில் பறக்கலாம் என்று நினைக்க வேண்டாம்.

உதாரணத்திற்கு கண்களையே மீண்டும் எடுத்துக் கொள்வோம். சிலருக்கு உடலில் சத்து குறைபாடினால் கிட்டப் பார்வை கோளாறும், சிலருக்கு தூரப் பார்வை கோளாறு என பல கோளாறுகளை நடைமுறையில் பார்க்கிறோம். சிலர் 80-90 வயதிலும் தெளிவான பார்வையைக் கொண்டிருக்கின்றனர். இதில் எந்த ஆச்சர்யமும் இல்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாறுபாடு..

இதற்கு காரணம் அவர்கள் உட்கொள்ளும் உணவின் தரம், பாரம்பரியம், வேலை பளு, மன உளைச்சல் என பல காரணங்களை கூறலாம். ஆக இவை சீராக இருந்தால் மனதும் அமைதி அடைய இயற்கையின் சக்தியுடன் கண்களைக் கொண்டு சில அடிகள் மட்டும் பார்வை தெரிவது மட்டுமல்ல பல மைல் தூரத்திலும் தெரியும்.

ஏன், ஒரு இடத்தில் உட்கார்ந்தாலே போதும் அனைத்தையும் அறிந்து கொள்ளலாம். இன்று எவ்வாறு அலைவரிசையில் டிவி தெரிகிறதோ அதே போல் உடல், மனம், இயற்கையின் சக்தி ஒன்றுகூடி அதன் அலைவரிசை மூலம் அனைத்தையும் காட்டும்.

இவை அனைத்தும் சாத்தியமாக வேண்டுமானால் முதலில் உணவை சீராக்க வேண்டும். அதுவும் இந்த மாதிரியான அபராசக்திக்கு உடல் தான் உட்கொள்ளும் உணவை எளிதாக ஜீரணிக்கவும் அதற்கு ஏற்ற துணை காரணிகள் சீராகவும் கட்டாயம் இருக்க வேண்டும்.

துணைக்காரணிகள் என்பது முக்கியமாக தாது உப்புக்கள். தாது உப்புக்கள் கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்பு, தாமிரம், மாங்கனீசு, துத்தநாகம், செலினியம் என பல உண்டு..

தங்கமும் ஒரு சிறு அளவில் உடலுக்கு தேவை என்பதால் தான் அந்த காலத்தில் தங்கப் பல்லும், உண்ணும் கை விரலில் தங்க மோதிரமும் அணிந்திருந்தனர்.

தாது உப்புக்கள் உடல் இயக்கத்திற்கு மிகவும் அவசியம். இவற்றின் அவசியத்தை கருதி உயிர் உப்புக்கள் என்றும் கூறுவதுண்டு. இவற்றின் துணையுடனே நாம் உண்ணும் உணவு உடலில் வளர் சிதை மாற்றத்திற்கும், மற்ற இயக்க செயல் பாட்டிற்கும் உதவுகிறது.

அரிசியின் சிறப்பு

தாது உப்புக்கள் நிறந்த உணவை உட்கொள்ள உண்மையான ஞானத்தையே பெறலாம். தாது உப்புக்கள் மட்டுமல்லாது நார்ச்சத்து, புரதம், வைட்டமின் சத்துக்களும் இந்த அரிசியில் உள்ளது.

பாரம்பரிய அரிசிகளைப் பற்றி அறிந்து வரும் நமக்கு ஒரு ஆச்சரியமூட்டும் ஞானத்தைக் கொடுக்கும் அரிசியாக காலா நமக் அரிசி உள்ளது.

காலா நமக் அரிசியின் பூர்விகம் – வரலாறு

உத்தரப்பிரதேசத்தைப் பூர்விகமாக கொண்ட இந்த அரிசி புத்தர் உண்ட அரிசி. இன்றும் புத்த பிட்சுக்கள் எங்கு சென்றாலும் இந்த அரிசியில் செய்த உணவையே உண்கின்றனர். 

2600 ஆண்டுகள் முன் வாழ்ந்த புத்தர் உண்ட அரிசி என்றால் இந்த அரிசியின் வரலாறு எவ்வளவு பழமையானது என்று சற்று சிந்தித்துப் பார்ப்போம். 

இந்தியில் ‘காலா‘ என்றால் கருப்பு, ‘நமக்‘ என்றால் உப்பு என்று அர்த்தம். பொன்னிற அரிசியான இந்த காலாநமக் கருப்பு நிற நெல்லைக் கொண்டது. பல தாது உப்புக்களை கொண்டது இந்த காலா நமக் கருப்பு நிற நெல்.

இந்தியில் ‘காலா‘ என்றால் கருப்பு, ‘நமக்‘ என்றால் உப்பு என்று அர்த்தம். பொன்னிற அரிசியான இந்த காலாநமக் கருப்பு நிற நெல்லைக் கொண்டது. பல தாது உப்புக்களை கொண்டது இந்த காலா நமக் கருப்பு நிற நெல்.

காலா நமக் அரிசியின் தாது சத்துக்கள்

மண்ணில் உள்ள பல சத்துக்களையும் சீராக எடுத்துக் கொண்டு வளரும் இந்த அரிசி மனிதர்களின் ரத்தத்தில் உள்ள கார அமில தன்மையை சீராக வைக்க உதவுகிறது. இதுவே பலநோய்களுக்கு மருந்தாக அமைகிறது. எழுபதிற்கும் மேற்பட்ட தாது உப்புக்களை கொண்ட இந்த அரிசி மனிதர்களுக்கு தேவையான மிக முக்கியமான 40 தாது உப்புக்களை எளிதாக அளிக்கிறது. அதுவும் இயற்கையான முறையில் விளைந்து இந்தியர்களுக்கு பிரதானமான அரிசியுடன் என்றால் அதன் தன்மையே ஆச்சரியமானது தான்.

உலக சந்தையில் காலா நமக் அரிசி

உலக சந்தையிலேயே வாசனை பாசுமதி அரிசியைவிட அதிக கிராக்கி கொண்ட அரிசி என்று கூட இதனை சொல்லலாம். இந்திய விடுதலைக்கு முன் இந்த அரிசிக்காகவே உத்தரப்பிரதேசத்தில் பல இடங்களை ஆங்கிலேயர்கள் கைப்பற்றியுள்ளனர் என்கிறது வரலாறு.

காலா நமக் அரிசியின் தன்மை, நிறம்

சன்ன ரகமான வாசனை கொண்ட அரிசி அதுவும் பொன்னிறமானது, சுவையோ சொல்லவே வேண்டாம் என்ற அளவு அருமையான அரிசி.

வட மாநில மண்ணிற்கு பிரதேகமாக வளரக் கூடிய அரிசியான இதனை இன்று தமிழகத்திலும் இயற்கையான முறையில் பலர் விளைய வைக்கின்றனர்.

நோய்களை விரட்டும் காலா நமக் அரிசி

தாது உப்புக்களின் அரிசியான இது மனிதர்களுக்கு கிடைத்த அதிசயத்தில் ஒன்று. இந்த அரிசியினை தொடர்ந்து உண்பதால் ஆஸ்டியோ போரோசிஸ், உடல் வளர்ச்சி தடை, எலும்பு தசை வளர்ச்சி யின்மை, எலும்பு வலுவிழத்தல், இருதயம் சிறுநீரக குறைபாடு, கால் கை வீக்கம், குறைந்த இரத்த அழுத்தம், நீர்சத்து குறைதல், குழந்தை இன்மை, ஆண் விந்தணு குறைபாடு, பக்கவாதம், மயக்கம், சோர்வு, தோல் வெளுத்தல், இரத்த சோகை, உடல் வளர்ச்சி தடை, மூச்சு திணறல், மூளை வளர்ச்சி போன்ற பிரச்சனைகளுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும். 

உடல் வளர்சிதை மாற்றத்திற்கு உறுதுணையாக இருக்கும். எலும்புகளை பலப்படுத்தம். இரத்த சிகப்பணுக்களுக்கு உறுதுணையாக இருக்கும். இரத்தத்தின் Ph ஐ சீராக கொள்ளும் தன்மை இந்த அரிசிக்கு உண்டு.

என்னென்ன உணவுகளை இந்த காலா நமக் அரிசியில் செய்யலாம்

பொன்னிற அரிசியான இந்த காலா நமக் அரிசியினை எளிதாக அன்றாட உணவிற்கு பயன்படுத்தலாம். பலகாரங்கள், கலவை சாதம், பிரியாணி, புலாவ், சாம்பார், ரசம் என அனைத்திற்கும் ஏற்றது. 

இது மட்டுமல்லாது அன்றாடம் சாதமாகவும் தயாரித்து சாம்பார், ரசம், கூட்டு, பொரியல், மோர் போன்றவற்றுடன் உண்ண உடல் பலப்படும்.

குழந்தைகளுக்கு தொடர்ந்து இந்த காலா நமக் அரிசி உணவை அளிக்க சீரான மூளை வளர்ச்சி அடையும். அறிவுத் திறன் மேம்படும். எளிதாக மனதையும், உடலையும் ஒருநிலைப் படுத்த உதவும்.

செய்யும் வேலையில் நல்ல கவனத்தையும், நிதானத்தையும் அளிக்கும். இந்த அரிசியினை தொடர்ந்து உண்பவர்களுக்கு தனியாக தியானம் தேவையே இல்லை எனலாம். அந்தளவிற்கு உடலும் மனமும் பக்குவப் பட்டு செயல்படும். 

3/5 - (13 votes)
சிந்தனை துளிகள் :

எறுப்பு ஆனை ஆகுமா, துரும்பு தூண் ஆகுமா?

You may also like...

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!