காலா நமக் அரிசி பயன்கள்

இன்றும் புத்த பிச்சுக்களால் அதிகம் பயன்படுத்தக்கூடிய ஒரு சிறந்த பாரம்பரிய அரிசி காலா நமக் அரிசி. இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த நம் பாரம்பரிய அரிசி இந்த காலா நமக் அரிசி. ஞானத்தை அளிக்கக் கூடிய ஒரு அற்புதமான அரசி. போதி மரத்து புத்தருக்கு பிடித்த ஒரு சிறந்த அரிசி என்றால் அதுவும் இந்த அரிசிதான். காலா என்றால் கருப்பு என்று பொருள், நமக் என்றால் உப்பு என்று பொருள். கருப்பு நிற நெல்லைக் கொண்ட இந்த வெள்ளை நிற காலாநமக் அரிசி அதிகமான தாது சத்துகளை கொண்டிருக்கக்கூடிய ஒரு சிறந்த பாரம்பரிய ரகம். இமையமலையை பூர்வீகமாக கொண்ட அரிசி, 120 நாள் வளர கூடியதாகவும் உள்ளது. காலாநமக் அரிசியைப் பற்றி பல சுவாரசியமான தகவல்களையும் இந்த பகுதியில் தெரிந்துக்கொள்ளலாம்.

உடலுக்கு தேவையான உடலுக்கு அத்தியாவசியமான பல தாது சத்துக்கள் இந்த காலா நமக் அரிசியில் உள்ளது. நல்ல பளபளப்புடனும், தனிப்பட்ட மணத்துடனும் இருக்கும் அதிக மதிப்பு கொண்ட அரிசி இந்த காலா நமக் பாரம்பரிய அரிசி. பார்க்க சாதாரணமாக, சாதாரண அளவில் இருக்கும் இந்த காலாநமக் அரிசி சாதம் வெந்த பின் நல்ல நீளமாக மாறும் தன்மை கொண்டது இதன் மற்றொரு சிறப்பு அம்சமாகும். காலாநமக் அரிசி சாதம் மிருதுவாகவும் மென்மையாகவும் இருக்கும். வட இந்தியாவில் அதிகமாக பயிரிடப்படும் பாரம்பரிய அரிசி இந்த காலாநமக் ரகம். பாரம்பரிய அரிசிகளின் ஆய்வுகளில் வெளிவந்த தகவலில் மிக அதிகமான புரத சத்துக்கள் கொண்ட இரண்டு அரிசியில் ஒன்று காலா நமக் அரிசி என்பது தெரிய வந்துள்ளது.

காலா நமக் அரிசியின் பயன்கள்

  • இரும்பு சத்துக்கள், ஜிங்க் (Zinc) சத்துக்கள் நிறைந்த அரிசி. இந்த சத்து குறைபாட்டினால் வரும் பல உடல் நோய்களுக்கு சிறந்த அரிசி.
  • புரத சத்துக்களும் அதிகம் கொண்ட சிறந்த அரிசி.
  • கல்லீரலை பலப்படுத்தும் அரிசி.
  • நார்ச்சத்துகள் நிறைந்த அரிசி.
  • உடல் கழிவுகளை வெளியேற்றும் சீராக வெளியேற்றும் அரிசி.
  • இந்திய அரசால் புவியியல் குறியீடு (GI) பெறப்பட்ட பெருமை வாய்ந்த பாரம்பரிய அரிசி.
  • அஜீரணம் சார்ந்த தொந்தரவுகளுக்கு சிறந்தது. ஜீரண மண்டலத்தை பலப்படுத்தும் அரிசி.
  • சர்க்கரை நோயை கட்டுப்படுத்த பெருமளவில் உதவும் அரிசி.
  • வைட்டமின் சத்து குறைபாடுகளுக்கு சிறந்த அரிசி.
  • Glycemic Index (50-53) குறைவாக இருக்கும் அரிசி.
  • மூளை நரம்புகளுக்கு பலத்தை அளிக்க உதவும் அரிசி.
  • சிறுநீரகம் சார்ந்த பிரச்சனைகளை நீக்க உதவுகிறது.
  • புற்றுநோய் காரணிகளை அழிக்கும் அரிசி.
  • தோல் சம்பந்தமான நோய்களில் இருந்து பாதுகாப்பை அளிக்கும்.
  • இரத்த சம்பந்தமான நோய்களுக்கும், பலவிதமான உடல் உபாதைகளுக்கும் சிறந்த ஒரு அற்புதமான அரிசி இந்த காலா நமக் அரிசி.
  • ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும் அரிசி.
  • முதுமையிலும் இளமையாக இருக்க துணை நிற்கும் சிறந்த அரிசி.
  • மொத்தத்தில் ஆரோக்கியத்தையும் நீண்ட வாழ்வையும் அளிக்கும் அற்புத அரிசி.
(12 votes)

1 thought on “காலா நமக் அரிசி பயன்கள்

  1. onlinejobbitly

    nice articles

Comments are closed.