காட்டுயானம் அரிசி / Kaatuyanam Rice

தமிழகத்தின் சிறந்த பாரம்பரிய அரிசிகளில் ஒன்றான இந்த காட்டுயானம் அரிசி சிவப்பு நிற மோட்ட அரிசி. ஏழு அடி உயரம் வரை வளரக்கூடிய இந்த காட்டுயானம் அரிசி வயக்காட்டில் காட்டு யானையே புகுந்தாலும் வெளியிலிருந்து பார்க்க யானை தெரியாத அளவிற்கு ஓங்கி உயர்ந்து செழித்து வளர்ந்து நிற்கும் அரிசி அதே போல் இந்த அரிசியில் செய்யும் உணவுகளை உண்பதால் யானையைப் போல் உடல் பலத்தை பெறலாம் என குறிப்பிடும் பெயர் காரணத்தை அளிக்கும் அரிசி.

160 – 180 நாள் விளையக்கூடிய இந்த காட்டுயானம் அரிசி வறட்சி, வெள்ளம் என எந்த இயற்கை சீற்றத்தினாலும் பாதிக்காது விளையக்கூடிய ரகம். நீரிழிவுக்கு சிறந்தது. சுண்ணாம்பு சத்துக்கள் உட்பட பல தாது சத்துக்களை கொண்ட சிறந்த அரிசி.

இணையத்தில் இந்த காட்டுயானம் அரிசியினை வாங்க – Online Link to buy Kattuyaanam Rice.

காட்டுயானம் அரிசியின் பயன்கள்

  • நீரிழிவுக்கு சிறந்தது.
  • உடல் பலத்தை பெருக்கும்.
  • உடல் எடையை சீராக்கும்.
  • புற்று நோய்க்கு சிறந்தது.
  • மாதவிடாய் கோளாறுகள், குழந்தையின்மை தொந்தரவுக்கு சிறந்தது.
  • மூட்டு வலி, எலும்பு பலவீனத்திற்கு சிறந்தது.
  • இளமையாக இருக்க உதவக்கூடியது.
  • இருதய நோய்களுக்கு சிறந்தது.

மேலும் இந்த அரிசியின் மருத்துவகுணங்கள், சிறப்புகளை தெரிந்து கொள்ள இங்கு இணையவும்.

(1 vote)