கோடகசாலை – மூலிகை அறிவோம்

Justicia procumbens; கோடகசாலை

இந்த செடி பூண்டு இனத்தை சேர்ந்த கோடகசாலை எனப்படும் சிறிய செடியினத்தைச் சேர்ந்தது. அரிய மருத்துவக் குணங்களுடையது. இந்தச் செடியின் இலைகளால் பூச்சிகள் கொட்டிய நஞ்சு, கடி, எலும்பு முறிவு, வெட்டுக்காயம், இரத்தம் கொட்டுதல் போன்றவை குணமாகும்.

கோடகசாலை, ஒடிவடக்கி, ஒடுஒடுக்கி என பெயர்கள் கொண்டது. இவற்றில் சிறிது பெரிது என்று பல இனங்கள் காணப்படுகிறது. இதனுடைய கொழுந்து இலைகளை கொதிக்கவைத்தும், விதைகளை சமைத்தும் உண்ண மருந்தாகிறது.

  • இதை சமூலமாக எடுத்து அம்மியில் வைத்து மைய அரைத்து எலும்பு முறிவு பகுதியில் பற்றுபோட்டு துணிவைத்து கட்ட எலும்பு முறிவு சரியாகும்.
  • ஆஸ்துமா, சளி, வாத நோய்களுக்கும் சிறந்தது.

  • இதன் இலைகளை ஒரு கைப்பிடி அளவு எடுத்து அம்மியில் வைத்து மைய அரைத்து ஒரு சுண்டக்காயளவு பசும்பாலில் காலை மாலை அருந்தி வர வெள்ளைப்படுதல், நீர் சுருக்கு, உடல் உஷ்ணம் முதியவை குணமாகும்.
  • தோல் நோய்களுக்கும் சிறந்தது.
  • உடல் வலி குறிப்பாக முதுகுவலிக்கு நல்ல நிவாரணத்தை அளிக்கும்.
  • கண் நோய்க்கு சிறந்த மருந்து.
(2 votes)