சிறு சோள வடை

நீரிழிவு நோய் செரிமான குறைகள், ரத்தசோகை, சர்க்கரை நோய் முதலியவற்றிலிருந்து நம்மை காக்கவும் வந்த நோயை போக்கவும் உதவும் நம் சோளம்.

சோளம் என்றவுடன் பலருக்கு மஞ்சள் நிறத்தில் இருக்கும் மக்கா சோளம் அல்லது பேபி கார்ன் போன்றவை நினைவிற்கு வரும்.

அனால் சிறுதானிய வகையில் நாம் குறிப்பிடும் சோளம் அதுவல்ல. அதைவிட சிறிதாகவும் வெள்ளை, சிகப்பு நிறத்தில் இருக்கும் சோளத்தையே இங்கு நாம் குறிப்பிடுகிறோம்.

அதிலும் இந்த சிகப்பு நிற சோளம் கண் குறைபாடுகளை சீர் செய்யும் ‘பீட்டா கரோட்டினை’ அதிகம் கொண்டுள்ளது. சோளத்தில் அடை, வடை, புட்டு, இட்லி, தோசை, பணியாரம் சுவையாக இருக்கும். எளிதாக சோளத்தை முளைக்கட்டி சுண்டலாகவும் உண்ணலாம். 

மேலும் சிறு சோளத்தின் பயன்கள் நன்மைகள் பற்றி தெரிந்துகொள்ள இங்கு தொடரவும் – சிறுசோளம். மற்ற சிறுதானியங்கள் பற்றிய நன்மைகள் மற்றும் பயன்கள் பற்றி தெரிந்துகொள்ள – சிறுதானியங்கள். For English Jowar Vadai Recipe.

தேவையான பொருட்கள்

  • 1 கப் சிறுசோளம்
  • 6 பச்சை மிளகாய்
  • 1 வெங்காயம்
  • சிறிது சோம்பு

  • சிறியத் துண்டு இஞ்சி
  • ஒரு சிட்டிகை மஞ்சள்தூள்
  • செக்கு கடலை எண்ணெய்
  • தேவையான அளவு உப்பு

செய்முறை

  • சிறுசோளத்தை ஆறு மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவேண்டும்.
  • நன்கு ஊறியபின் சிறுசோளத்தை, மிளகாய், இஞ்சி, சோம்பு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவேண்டும்.
  • அரைத்த மாவில் சிறிதாக நறுக்கிய வெங்காயம், மஞ்சள்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்துக் கொள்ள வேண்டும்.
  • மாவு தண்ணீராக இல்லாமல் சற்று கெட்டியாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.
  • செக்கு கடலை எண்ணெயை ஒரு வாணலியில் சூடாக்கிக் கொள்ளவேண்டும்.
  • மாவுனை சிறு உருண்டைகளாகச் செய்துக் கொண்டு வடை அளவிற்கு வட்டமாக ஆனால் மெல்லியதாகத் தட்டிக் வாணலியில் மிதமான தீயில் எண்ணெய் விட்டு பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.
  • சூடாக சுவையான வடை தயார்.

சிறு சோள வடை

நீரிழிவு நோய் செரிமான குறைகள், ரத்தசோகை, சர்க்கரை நோய் முதலியவற்றிலிருந்து நம்மை காக்கவும் வந்த நோயை போக்கவும் உதவும் நம் சோளம்.
ஆயத்த நேரம் : – 6 hours 15 minutes
சமைக்கும் நேரம் : – 15 minutes
மொத்த நேரம் : – 6 hours 30 minutes

தேவையான பொருட்கள்

  • 1 கப் சிறுசோளம்
  • 6 பச்சை மிளகாய்
  • 1 வெங்காயம்
  • சிறிது சோம்பு
  • சிறியத் துண்டு இஞ்சி
  • ஒரு சிட்டிகை மஞ்சள்தூள்
  • செக்கு கடலை எண்ணெய்
  • தேவையான அளவு உப்பு

செய்முறை

  • சிறுசோளத்தை ஆறுமணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவேண்டும்.