நீரிழிவு நோய் செரிமான குறைகள், ரத்தசோகை, சர்க்கரை நோய் முதலியவற்றிலிருந்து நம்மை காக்கவும் வந்த நோயை போக்கவும் உதவும் நம் சோளம்.
சோளம் என்றவுடன் பலருக்கு மஞ்சள் நிறத்தில் இருக்கும் மக்கா சோளம் அல்லது பேபி கார்ன் போன்றவை நினைவிற்கு வரும்.
அனால் சிறுதானிய வகையில் நாம் குறிப்பிடும் சோளம் அதுவல்ல. அதைவிட சிறிதாகவும் வெள்ளை, சிகப்பு நிறத்தில் இருக்கும் சோளத்தையே இங்கு நாம் குறிப்பிடுகிறோம்.
அதிலும் இந்த சிகப்பு நிற சோளம் கண் குறைபாடுகளை சீர் செய்யும் ‘பீட்டா கரோட்டினை’ அதிகம் கொண்டுள்ளது.
சோளத்தில் அடை, வடை, புட்டு, இட்லி, தோசை, பணியாரம் சுவையாக இருக்கும். எளிதாக சோளத்தை முளைக்கட்டி சுண்டலாகவும் உண்ணலாம்.
மேலும் சிறு சோளத்தின் பயன்கள் நன்மைகள் பற்றி தெரிந்துகொள்ள இங்கு தொடரவும் – சிறுசோளம்.
மற்ற சிறுதானியங்கள் பற்றிய நன்மைகள் மற்றும் பயன்கள் பற்றி தெரிந்துகொள்ள – சிறுதானியங்கள்.
தேவையான பொருட்கள்
- 2 கப் வெள்ளை சிறு சோள ரவை ((சிறுசோளத்தை ரவை போல உடைத்து கொள்ளவும்))
- 2 வரமிளகாய்
- 1 ஸ்பூன் கடுகு
- ½ ஸ்பூன் இஞ்சி பொடிதாக
- 1 ஸ்பூன் பச்சை மிளகாய்
- 1 வெங்காயம்
- தேவையான அளவு உப்பு
- 2 ஸ்பூன் செக்கு கடலை எண்ணெய்
- சிறிதளவு கறிவேப்பிலை
செய்முறை
- முதலில் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி இவைகளை பொடியாக நறுக்கவும்.
- சிறு சோளத்தை ரவை போல் மிக்ஸ்யில் உடைத்துகொள்ளவும். சிகப்பு சோளத்திலும் இந்த முறையில் உப்புமா செய்யலாம்.
- பிறகு ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடானதும் அதில் கடுகு, காய்ந்த மிளகாய் போட்டு, கடுகு வெடித்ததும் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாகும்வரை வதக்கி அதில் இஞ்சி, பச்சை மிளகாய் போட்டு கிளறவும்.
- அதன் பின்பு அதில் சோள ரவையை போட்டு வாசனை வரும் வரை கிளறவும்.
- 4 கப் தண்ணீர் ஊற்றி அதில் உப்பு சேர்த்து ஒரு கொதி வந்தபின் கிளறி மூடி தீயை குறைத்து வைத்து 5 நிமிடம் புழுங்க வைக்கவும்.
- பின் வெந்ததை சரி பார்த்து இறக்கவும்.
சிறுசோள ரவை உப்புமா