சோள மசாலா பொரி / Jowar Pops

பாப் கார்ன் பிடிக்காத குழந்தைகளே இருக்க மாட்டார்கள். மஞ்சள் சோளத்தை விட சத்துக்கள் அதிகம் கொண்டது இந்த சிறுசோளம். இதனில் குழந்தைகள் விரும்பும் வகையில் சோள பொரியாக தயாரித்துக் கொடுக்க குழந்தைகள் விரும்பி உண்பார்கள்.

தேவையான பொருட்கள்

  • 1 கப் வெள்ளை சோளம் / சிறு சோளம்
  • உப்பு
  • ¼ ஸ்பூன் மிளகாய்த் தூள்
  • ¼ கப் பொடியாக நறுக்கிய வெங்காயம் வெள்ளரிக்காய் தக்காளி துருவிய கேரட் கொத்தமல்லி தழை சேர்ந்தது
  • 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு
  • ¼ ஸ்பூன் மிளகுத் தூள்

செய்முறை

  • முதலில் சோளத்தை கல் இல்லாமல் சுத்தம் செய்துக் கொள்ள வேண்டும்.
  • பின் சிறிது நேரம் நீரில் ஊறவைத்து சற்று உலர்த்த வேண்டும்.
  • பின் ஒரு வாணலியில் சிறு சோளத்தை சிறுதீயில் நிதானமாக பொரிய விடவேண்டும்.

  • கருகாமல் எல்லா சோளத்தையும் பொரியவிட்டு எடுக்க வேண்டும்.
  • இதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் வெள்ளரிக்காய் தக்காளி துருவிய கேரட் கொத்தமல்லி தழை, மிளகுத் தூள், உப்பு, மிளகாய்த் தூள், எலுமிச்சை சாறு என அனைத்தையும் ஒன்றாக கலந்து பொறியை நன்றாக பிரட்டிவிட்டு பரிமாறலாம்.

  • சுவையான சத்தான சிற்றுண்டி. குழந்தைகள் விரும்பி உண்பார்கள்.
  • வெள்ளை சிறு சோளம் அல்லது சிகப்பு சிறு சோளத்தையும் பயன்படுத்தலாம். தேவைப்பட்டால் மஞ்சள் தூள் சேர்க்கலாம்.
  • இந்த சிறு சோள பொரியை வைத்து சோள பொரி உருண்டை, பேல் பூரி, மசாலா பூரி என சுவையான வடஇந்திய சாட் வகைகளையும் சத்தான முறையில் தயாரிக்கலாம்.

சோள மசாலா பொரி

ஆயத்த நேரம் : – 10 minutes
மொத்த நேரம் : – 10 minutes

https://www.youtube.com/watch?v=9ocGTvtfiRs