பெண்கள் விரும்பும் மல்லிகை மலரில் ஒரு வகை மலர் தான் இந்த ஜாதிமல்லி. சாதாரணமாக வீடுகளில் வைத்து வளர்க்கப்படும் ஒரு பூ வகையை சேர்ந்தது. இதனுடைய நறுமணம் பலருக்கும் விருப்பமான ஒன்று. ஜாதிமல்லி பூக்கள் உடல் நலத்திற்கும், மன நலத்திற்கும் உறுதுணையாக இருக்கும் மலர். ஜாதி மல்லி மட்டுமல்லாமல் ஜாதி மல்லி இலையும் பல மருத்துவ குணங்கள் கொண்ட ஒரு மூலிகை என்று கூட சொல்லலாம்.
ஜாதிமல்லி வீக்கத்தைக் கரைக்கக் கூடியது, தலைவலி, காதுவலி போன்றவற்றிற்கும் சிறந்த மருந்தாக பயன்படக் கூடியதாகவும் உள்ளது.
உடலில் ஏற்படும் வீக்கத்தை கரைக்க மல்லிகைச் செடியின் இலைகளை நல்லெண்ணெயில் வதக்கி, வீக்கங்களின் மீது ஒத்தடம் கொடுக்க விரைவில் வீக்கம் கரைந்து வலியும் நின்றுபோகும். தொண்டையில் ஏற்படும் நோய்களுக்கும், வலிகளுக்கும் நெஞ்சில் ஒத்தடம் கொடுப்பது சிறந்தது.
தலைவலிக்கு ஜாதி மல்லி இலையுடன் சிறிது சுக்கு சேர்த்து சிறிதளவு பசும்பாலை ஊற்றி அரைத்து அதனை நெற்றி, கன்னம் பகுதிகளில் தடவி நெருப்பனலில் காண்பிக்க ஒற்றைத் தலைவலியும் உடனடியாக நிற்கும்.
காதுவலிக்கு ஜாதி மல்லி இலைச் சாறை நல்லெண்ணெயுடன் சம அளவு கலந்து காய்ச்சி வடிகட்டிக் பதமாக இறக்கி அதில் இரண்டு துளிகள் காதில் விட காதுவலி உடனே குணமாகும். காதில் சீழ் வருதல் நிற்கும். உடலில் ரணமாகி சீழ் வடியும் புண்களின் மேல் மேற்படி மருந்தைத் தடவி வர புண்கள் ஆறும், சீழ் வருதல் நின்று போகும்.
வாய்நாற்றம் ஒழிய ஜாதி மல்லி இலை, விளாமர இலை, கிச்சிலிப் பல தோல் அல்லது நார்த்தங்காய் தோல் (உலர்ந்தது) எடுத்து அனைத்தையும் ஒருசேர வாயிலிட்டு நன்கு மென்று குதப்பிக் சில நிமிடங்களுக்குப் பிறகு உமிழ்ந்து விடவும். சுடுநீரினை வாயில் ஊற்றி கொப்பளிக்கவும். இவ்வாறு தினசரி ஒரு வேளை விடாது பதினைந்து நாட்கள் செய்துவர நெடு நாள்பட்ட வாய்நாற்றம் நோய் அறவே ஒழியும். மேலும் வாய், உதடு, நாக்கு பகுதிகளில் வெடிப்போ, ரணமோ இருந்தால் ஆறிவிடும்.
ஆண்மை சக்திக்கு ஜாதி மல்லியின் இலைகளை நன்கு அரைத்து விழுதை தளர்ந்து போன ஆண் குறிகளின் மேலும், தொடையிடுக்குகளிலும் வைத்துக் கட்டிவர முதுமை உணர்ச்சிகள் மறைந்து இளமை உணர்ச்சிகள் திரும்பும்.
Thank you for good information.
Thank u