மல்லிகை பூ மருத்துவம்

மல்லிகை பூவை விரும்பாத பெண்களே இருக்க முடியாது. அதன் நறுமணம் மனதை மயக்கும் தன்மை கொண்டது. பெண்களின் கூந்தலை அலங்கரிப்பது மட்டுமே மல்லிகையின் சிறப்பல்ல. பல மருத்துவ குணங்களும் மல்லிகைக்கு புகழ் சேர்க்கிறது. மல்லிகை மட்டுமல்லாமல் மேலும் சில மலர்களும் மருத்துவகுணங்களை கொண்டுள்ளது.

கருப்பை கட்டி / PCOS

பெண்களுக்கு ஏற்படும் கருப்பை கட்டிகள், முறையற்ற மாதவிடாய், PCOS போன்ற தொந்தரவுகளுக்கு ஒரு அற்புதமான மருந்து மல்லிகை. இந்த மல்லிகையின் வாசனை பெண்களின் ஹார்மோன்களை நெறிப்படுத்தும். மல்லிகைப் பூவை பெண்கள் சூடிக் கொள்வதால் பெண்களின் இனப்பெருக்க மண்டலம் பலமடையும். மல்லிகை பெண்களுக்கு அழகை மட்டுமல்ல ஆரோக்கியத்தையும் அளிக்கிறது. இதனால் மல்லிகை கிடைக்காத பல நாடுகளிலும் மல்லிகையின் நறுமண எண்ணெய்யை அதிகளவில் பெண்கள் பயன்படுத்துகின்றனர்.

கண்களுக்கு

கண்களுக்கு சிறந்த மருந்து மல்லிகை. நான்கைந்து மல்லிகைப் பூக்களை எடுத்துக் கசக்கி, இரண்டு சொட்டுகள் கண்ணில் விட்டு வர, கண்ணில் ஏற்பட்ட தொந்தரவுகள் மாறத் தொடங்கும்.

தாய்ப்பால் சுரப்பை நிறுத்த

தாய்மார்களுக்கு பால் சுரப்பதை நிறுத்த முடியாமல் ஒரு குறிப்பிட்ட வயது கடந்தும் கைக்குழந்தைக்கு பால் கொடுப்பது நல்லதல்ல. பால் சுரப்பை வலியின்றி நிறுத்த மல்லிகைக்கு ஈடு இணையான மருந்து கிடையாது. மல்லிகைப் பூக்களை மார்பகங்களில் குறைந்தபட்சம் 3 நாட்கள் வைத்துக் கட்டிக் கொண்டு வந்தால் பால் சுரப்பு அடங்கிவிடும்.

கட்டிகள்

கோடைக் கட்டி அல்லது வேறு எந்தக் கட்டி வந்தாலும் அதற்கு மல்லிகை சிறந்த பயனை அளிக்கும். கட்டியின் மீது மல்லிகைப் பூவை அரைத்துப் பற்றுப் போட்டு வர கட்டிகள் விரைவில் கரைந்து விடும்.

தலைவலி

பெண்களுக்கு அடிக்கடி தலைவலி வருவதுண்டு. தலைவலியுள்ள பெண்கள், மல்லிகையைத் தலையில் சூடிக் கொண்டாலே போதும் தலைவலி பறந்து போகும். தலையணையடியில் மல்லிகை மலரைத் தூவிப் படுத்தாலும் தலைவலி காலையில் கானல் நீராகிவிடும்.

மல்லிகை தேநீர்

மல்லிகையை நீரில் கொதிக்க வைத்து தேநீராக பருக ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், உடல் எடை குறைக்க, மூளை செயல்பாடுகளை அதிகரிக்க, சருமத்தின் பளபளப்பை அதிகரிக்க, புற்றுநோயிலிருந்து நம்மை பாதுகாக்க பயன்படும். மேலும் மன அழுத்தம், பதற்றம், இருதய நோய், நீரிழிவு, சளி இருமலுக்கும் நல்ல பலனை அளிக்கும்.

மல்லிகை நறுமண எண்ணெய்

அனைவரும் விரும்பும் நறுமணத்தைப் பெற்ற மல்லிகையைக் கொண்டு தைலம் / நறுமண எண்ணெய் எடுக்கலாம். கடும் கோடையில் மல்லிகை தைலத்தைக் கொண்டு தலை மூழ்கினால், உடல் குளுகுளுவென்று ஆகிவிடும்.

சரும நோய்கள்

இந்த மல்லிகைத் தைலத்தைத் தேய்த்துக் குளித்து வந்தால் உடலில் சரும நோய்களே வராமல் தடுக்கலாம்.

கண் எரிச்சலும், தலைவலியும் போயே போய்விடும். தலையில் மல்லிகைப் பூ எண்ணெய்யைத் தொடர்ந்து பயன்படுத்த கண் எரிச்சல் நீங்கும்; கண் பார்வை தெளிவாகும், பெண்களுக்கு பல விதங்களில் நன்மையை அளிக்கும்.

(1 vote)