- மாதுளம் பழம் தினமும் சாப்பிட இரத்தம் விருத்தியாகும்.
- பேரிச்சம்பழம் சேர்த்துச் சாப்பிடலாம்.
- வெள்ளை சர்க்கரையை முற்றிலும் தவிர்த்து வெல்லம், நாட்டு சர்க்கரை, கருப்பட்டி, தேன் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- காலையில் மூலிகை பானம் பருகுவது சிறந்தது.
- நெல்லிக்காயுடன் கருவேப்பிலை சேர்த்து சாறு அல்லது சட்னி செய்து உண்ண பதினைந்து நாளில் நல்ல பலனை பெறலாம்.
- நெல்லிவற்றலை வாயில் அழுத்தி வைத்துக்கொண்டு சிறிதுசிறிதாக உமிழ்நீருடன் கலந்து உண்ணலாம். நல்ல பலனை இந்த நெல்லிவற்றல் அளிக்கும்.
- நாட்டு அத்திப் பழம் சாப்பிட விரைவாக இரத்த விருத்தி அதிகரிக்கும். அத்திப்பழ ஜூஸ் செய்து பருகலாம்.
- அகத்திக் கீரை, புளிச்ச கீரை, அரைக்கீரை போன்ற கீரைகளை உண்பதால் இரத்தம் விருத்தியாகும்.
- திராட்சை, பப்பாளி ஆகிய பழங்களும் இரத்த சோகை போக்கும் பழங்கள்.
- பீட்ரூட், காரட், சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறப் பழங்கள், காய்கறிகள் இரும்பு சத்துக்கள் நிறைந்தவை இவற்றுடன் வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்த பழங்கள், காய்கறிகள் போன்ற உணவுகளையும் சேர்த்து உண்ண இரத்த சோகை மறையும். இரும்பு சத்துக்கள் நிறைந்த உணவுகளாக இவை இருக்கும்.
- மிளகாய் காரம், புளியை குறைந்து சேர்த்துக் கொள்வது சிறந்தது.
இரத்த விருத்திக்கான டானிக்
இந்த டானிக் இரத்த சோகையை குறைக்கும் தன்மை கொண்டது. மேலும் இரத்த விருத்தியை அளிக்கும். இதனை எளிமையாக வீட்டிலேயே தயாரித்து உட்கொள்ள நல்ல பலனை பெறலாம்.
- கறிவேப்பிலை – 1/2 கப்
- கொத்தமல்லி இலை – 1/2 கப்
- புதினா – 1/2 கப்
- பேரிச்சம்பழம் – 2-3
- வெல்லம் – 4-6 ஸ்பூன்
- தேங்காய் துருவல் – 2 ஸ்பூன்
- இஞ்சி – 1 சிறு துண்டு
- ஏலக்காய் – 1
- ஊற வைத்து தோல் உரித்த பாதாம் – 5
- நெல்லிக்காய் – 2
இவை அனைத்தையும் 2 கப் நீர் விட்டு அரைத்து ஜுஸ் எடுத்து எலுமிச்சம்பழச் சாறு சேர்த்து கலந்து குடிக்க இரத்தம் விருத்தியாகும். உடனடியாக புத்துணர்ச்சி கிடைக்கும். பதினைந்து நாளில் அனைத்து விதமான இரத்த சோகையும் முற்றிலும் மறையும்.