மூச்சு விட சிரமமா?
காயங்கள் ஏற்பட்டால் குணமாக நாளாகிறதா?
எந்த நேரமும் உடல் குளிரும் உணர்வு ஏற்படுகிறதா?
உரமில்லாத சதை போடுகிறதா?
பார்வை மங்கலா?
இந்த தொந்தரவுகள் இருப்பதாக உணர்கிறீர்களா? உடலில் இரும்புச்சத்து குறைவாக இருக்கக்கூடும். ஒரு சராசரி மனிதனுக்கு ஒரு நாளைக்கு சுமார் 12 மில்லி கிராம் இரும்புச் சத்து அவசியம் தேவை. உயிர் வாழ மிகவும் அவசியமான உயிர்வளியை உடல் முழுவதும் கொண்டு செல்லும் இரும்புச் அதற்கு வேறு மாற்று இல்லை.
இரத்தசோகை நோய் இரும்புச்சத்து இன்மையால் ஏற்படுகிறது. சோகை நோயாளிகள் சிலர் எவ்வளவு இரும்புச் சத்து மாத்திரைகளை சாப்பிட்டாலும் பயனில்லையே என்று புலம்புவதும் உண்டு. இதற்கு காரணம் உடம்பில் இரும்பு சத்தினை உட்கிரகிக்க துணையாக இருக்கும் செம்புச்சத்து குறைபாடு. போதிய அளவு செம்புச்சத்து இருந்தால் தான் இரும்புச்சத்து உடலில் வேலை செய்யும்.
மருந்து மத்திரிகளை தவிர்த்து இரும்புச் சத்தினை நேரடியாக உணவின் மூலம் பெறுவதால் இரும்பு சத்துடன் செம்புச் சத்து எளிமையாக கிடைக்கும்.
இரும்புச் சத்து மிகுந்த உணவுகள் சில
பேரிச்சம்பழம், திராட்சைப்பழம், சுண்டைக்காய், மிதிபாகல், கொத்தவரங்காய், முருங்கைக்காய், மாங்காய், பசலைக் கீரை, மணத்தக்காளிக் கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை போன்றவையாகும்.
இந்த உணவுகளை அவ்வப்பொழுது உணவோடு உட்கொள்ள இரும்பு சத்து குறைபாடு, செம்பு சத்து குறைபாடுகள் நீங்கும்.