வயிற்றுப் பூச்சி நீங்க

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இருக்கும் ஒரு மிக முக்கிய பிரச்சனை வயிற்று பூச்சி. நமது வயிற்றில் பூச்சி இருக்க என்னதான் நாம் சத்துக்கள் நிறைந்த உணவுகள் உண்டாலும் அவற்றிலிருக்கும் சத்துக்கள் நமது உடலில் சேராது. நம்மை சுற்றி இருக்கும் சுற்றுச்சூழல் தொடங்கி நாம் உண்ணும் உணவு, நீர், சத்தற்ற உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், அதிக இரசாயனங்கள் கொண்ட உணவுகள் என பலவற்றால் பூச்சிகள் வயிற்றில் இருப்பதும் அவை பல்கிப் பெருகுவது.

இரத்த சோகை, சத்துப் பற்றாக்குறை என பல தொந்தரவுகள் ஏற்படும். அதனால் பூச்சி தொந்தரவிலிருந்து நம்மை நாம் பாதுகாக்க ஆறு மாதத்திற்கு ஒருமுறை பூச்சியை வெளியேற்ற சுக பேதி எடுப்பதும், அவ்வப்பொழுது உணவு முறைகளால் வயிற்றை சுத்தம் செய்வது சிறந்த பலனை அளிக்கும். ஆரோக்கியம் பெருகும்.

  • முருங்கை ஈக்கு, கருவேப்பிலை ஈக்கு வயிற்று பூச்சிகளை வெளியேற்ற சிறந்த உணவாகவும், மருந்தாகவும் பயன்படுபவை. இரண்டையும் சம அளவு எடுத்து தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். நீர் சுண்டி பாதி அளவு ஆனதும் வடிகட்டி எடுத்துப் பருக வேண்டும்.
  • பூச்சிகளுக்கு கசப்பு சுவை பிடிக்காது. வேப்பங் கொழுந்தை சாறெடுத்து முதல் நாள் இரவு கால் கப் அளவு தேவைபட்டால் இனிப்பு சேர்த்து பருகி மறுநாள் காலை விளக்கெண்ணை குடிக்க பூச்சிகள் மடிந்து வெளியேறும்.
  • வேப்பிலைகளையும் இவ்வாறு சாறெடுத்து பூண்டு அல்லது பெருங்காயம் சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்க பூச்சிகள் வெளியேறும்.
  • மாம்பருப்பு பூச்சிகளை வெளியேற்ற உதவும் சிறந்த மற்றொரு உணவுப் பொருள். துவர்ப்பு கசப்பு நிறைந்த மாம்பருப்பை வெயிலில் காயவைத்து பொடி செய்து அதனுடன் தேன் அல்லது பனஞ் சர்க்கரை கலந்து குழைத்து உண்ண நல்ல பலன் கிடைக்கும்.
  • வேப்பிலை மற்றும் மஞ்சள் சேர்த்து நீரில் சுண்டக் காய்ச்சி கசயமாக தயாரித்து குழந்தைகள் முதல் பெரியவர்களுக்கு அளிக்க நல்ல பலன் கிடைக்கும்.
  • அவ்வப்பொழுது கசப்பான நாட்டுக் கோவை, பாகற்காய் ஆகியவற்றை உணவாக உட்கொள்ள பூச்சிகள் வயிற்றில் தங்காமல் வெளியேறும்.

சத்தான உணவுகள், இயற்கை உணவுகள், சாறு வகைகள் போன்ற சாறு வகைகளை தொடர்ந்து எடுத்துக் கொள்வதால் வயிற்று பூச்சிகள் வெளியேறும். இந்த கசயங்கள், மருந்துகளை பெரியவர்கள் கால் கப் அளவு எனவும் குழந்தைகள் ஒரு ஸ்பூன் அளவும் எடுத்துக் கொள்ள நல்ல பலன் கிடைக்கும்.

(1 vote)