இரவில் நல்ல தூக்கம் வர

இந்தியாவில் பலருக்கும் இருக்கும் ஒரு மிகப்பெரிய தொந்தரவு தூக்கமின்மை. இரவில் நல்ல தூக்கம் வர நமது பாரம்பரிய வீட்டு வைத்திய முறைகள், பாட்டி வைத்திய முறைகள் பல உள்ளன. அவற்றிற்கான சிறந்த சில தீர்வுகளை இந்த பதிவில் பார்க்கலாம்.

மேலும் இரவில் தூக்கம் வராமல் பலர் சிரமப்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன, அவை மனஉளைச்சல், மனசோர்வு, வேலைப்பளு, பொருளாதார தொந்தரவுகள், உடல் நலமின்மை, மின்சாதன பொருட்கள், கணினி, தொலைக்காட்சி, தொலைபேசி என பல காரணங்களால் இரவு தூக்கம் பலருக்கு பாதிக்கபடுகிறது.

இரவு அதிக நேரம் கண்விழித்து தொலைக்காட்சி பார்ப்பதையும் தொலைபேசி பார்ப்பதையும் தவிர்ப்பது மிகவும் அவசியமான ஒன்று. இதனை கடைபிடித்து கீழிருக்கும் சில எளிய வீட்டு வைத்திய முறைகள் பின்பற்ற நல்ல பலனை எளிதில் பெறலாம்.

கசகசா

கசகசா, கற்கண்டு சேர்த்து தினமும் சாப்பிட்டு வர நன்றாக தூக்கம் வரும்.

சப்போட்டா பழம்

பகலில் அன்றாடம் ஒரு சப்போட்டா பழம் உண்டுவர இரவில் நல்ல தூக்கம் வரும்.

திருநீற்றுப் பச்சை

திருநீற்றுபச்சிலையை நுகர்வதால் தலைவலி தூக்கமின்மை சாந்தமாகும்.

தர்ப்பைப் புல்

தர்ப்பைப் புல்லை தலையணை கீழ் வைத்து படுத்துத் தூங்க நல்ல தூக்கம் வரும். தீய கனவுகள் ஏதும் வராது.

சீரக பொடி

சீரகத்தை வறுத்து பொடி செய்து வாழைப்பழத்துடன் சாப்பிட நல்ல பலன் கிடைக்கும்.

(2 votes)