Indigofera aspalathoides; சிவனார் வேம்பு
சிவந்த தண்டுகள், சிவந்த ஊதா மலர்கள், சிறிய இலைகள் கொண்ட சிறந்த சிறு செடி மூலிகை இந்த சிவனார் வேம்பு. தமிழகத்தில் செம்மண் நிலத்தில் இந்த மூலிகையை அதிகமாக காணலாம். இதனுடைய இலைகள் சிறிய முட்டை வடிவத்தில் இருக்கும். இதனுடைய காய்கள் கொத்தாக இருக்கும். செடி முழுவதுமே மருத்துவ பயன் கொண்டது.
சொறி, சிரங்கு போக்கும் அருமருந்து. காந்தாரி, அன்றெரித்தான் பூண்டு, இறைவன வேம்பு என பெயர்கள் கொண்டது. இதனை பறித்த உடன் அன்றே உலர்த்தாமல் எரித்தாலும் புகையைக் கக்கும் மூலிகை.