முருங்கைக்காய்
முருங்கை மரத்தின் அனைத்து பாகங்களும் மருத்துவப்பயனுடையது. வாதம், பித்தம், கபம் நீக்கும். முருங்கைக்கீரை சுரம், தொண்டை கட்டு நீக்கும். முருங்கை வேர் மற்றும் பட்டை வாத வீக்கங்களுக்கு நல்லது. முருங்கை விதைகள் குழந்தையின்மை மற்றும் நரம்புகளுக்கு சிறந்தது.
முற்றின முருங்கையில் விதைகள் முற்றியிருக்கும். வீட்டில் மரம் வைத்திருப்பவர்கள் முற்றின காய்களை வீணாக்காமல் அதனைக் கொண்டு சூப் தயாரித்து அன்றாடம் ஒரு இரண்டு மாதம் பருக எப்பேர்ப்பட்ட வாதம், நரம்பு நோய்களும் நீங்கும். வீட்டில் மரமில்லாதவர்கள் மரமிருப்பவர்களிடம் முற்றினக் முருங்கைக் காய் தேவையை முன்கூட்டியே சொல்லிவைத்து அல்லது தேடி வாங்கிவந்து பயன்படுத்த நல்ல பலனை இரண்டு மாதங்களில் பெறலாம்.
வாழைக்காய்
பித்தம், உஷ்ணம், இருமல் குணமாகும். உடல் பலமுண்டாகும். வாழைக்கச்சல் கூட்டு செய்து உண்டால் பெரும்பாடு, ரத்த மூலம் குணமாகும். வாழைத் தண்டு ஜீரண சக்தியையும், உடல் வலுவையும் அதிகரிக்கும். சிறுநீரகம் சுத்தமாக்கும். வாழைப்பழம் மிகவும் சத்தானது, மூளைப் பழம் என்றும் குறிப்பிடுவர்.
கோவைக்காய்
இருமல், ஈழை, நோய் தீரும். சர்க்கரை வியாதிக்கு நல்லது. வைட்டமின் ஏ, சி மிகுந்தது.
உருளைக்கிழங்கு
இது உடலுக்கு பலம் கொடுக்கும், ஆனால் அசிடிட்டி இருப்பவர்கள் உண்ணக்கூடாது. தீக்காயங்களுக்கு உருளைக்கிழங்கை தடவ விரைவில் குணமாகும். தோலில் ஏற்படும் கரும்படைகளுக்கு உருளைக்கிழங்கு துண்டுகளை தேய்த்து வர தோல் நோய் நாளடைவில் குணமாகும். இந்நோய் ஒருவகை எக்ஸிமா ஆகும்.
முள்ளங்கி
வயிறு, சிறுநீரகம் வலுவடையும். எதிர்ப்பு சக்தி பெருகும். பெண்களுக்கு ஏற்படும் கருப்பை நோய்களுக்கு மிக சிறந்தது.
சேனைக்கிழங்கு
சுண்ணாம்பு சத்து மிகுந்தது.
கருணை
மூலத்திற்கு சிறந்தது. மலச்சிக்கலுக்கு நல்லது. வைட்டமின் இ சத்து கொண்டது. சர்க்கரை வியாதிக்கு நல்லது.