பேரிக்காய் – பயன்கள் நன்மைகள்

பேரிக்காய், நார், நீர் சத்துக்கள் நிறைந்த பழம். இதன் தனிப்பட்ட சுவை குழந்தைகள் தொடங்கி பெரியவர்களுக்கும் விருப்பமானது. பேரிக்காய் ஆப்பிள் வகையைச் சார்ந்த பழம் எனினும் ஆப்பிளில் அறவே இல்லாத விட்டமின் ஏ சத்துக்கள் இப்பழத்தில் உள்ளது. ஆப்பிளை விட பேரிக்காய் விலை மலிவு என்றாலும் ஆப்பிளை விட பல சத்துக்களும் மருத்துவக் குணங்களும் அதிகம் கொண்டது.

நோய் எதிர்ப்பு சக்தி

பேரிக்காயை அவ்வப்பொழுது சாப்பிட உடலில் ஏற்படும் பல தொந்தரவுகள் நீங்கும், உடல் உறுதிப்படும். நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கும்.

எலும்புகள் பலப்படும்

கோடை காலத்தில் உடலுக்கு ஊட்டமளிக்கும் பழம் இந்த பேரிக்காய். இந்த பழத்தை கிடைக்கும் காலத்தில் அடிக்கடி சாப்பிட்டு வர உடலுக்கு நல்ல சுண்ணாம்புச்சத்தும், இரும்புச்சத்தும் கிடைக்கும். எலும்புகள், பற்கள் பலப்படும். இதயம் வலுவாகும்.

ஜீரணமண்டலம் வலுப்படும்

இரைப்பை, குடல் மற்றும் ஜீரண உறுப்புக்கள் பலமாக்கும் ஆற்றல் இதற்கு உண்டு. இதை அடிக்கடி உண்பதால் பசியும் எடுக்கும். சீரணமும் நன்றாக இருக்கும். அஜீரணம் நீங்கும். கிராணி என்னும் வயிற்றுப்போக்கை நிறுத்தும் சூரன் பேரிக்காய் என்றால் அது மிகையாகது.

படபடப்பு, பதட்டம், அச்சம் நீங்கும்

திடீரென சிலருக்கு மனதில் அச்சம் தோன்றும். இதயம் படபடக்கும். வியர்வை ஏற்படும். கை கால் உதறும். இப்படிப்பட்டவர்கள் பேரிக்காயைத் தொடர்ந்து சாப்பிட இந்தப் பலவினங்கள் நீங்கும். மன உறுதியும், மனத் தென்பும் ஏற்படும்.

குழந்தைகளுக்கு

சிறுவர்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய பழம் இந்த பேரிக்காய். குழந்தைகளுக்கு எலும்புகளும், பற்களும் பலமாக இருக்கவும் பல நோய்கள் வராமல் இருக்கவும் பேரிக்காய் துணை செய்யும்.

பெண்களுக்கு

கர்ப்பிணிகள் பேரிக்காயைச் சாப்பிட்டு வந்தால் பிறக்கும் குழந்தை நல்ல திடமாக, ஆரோக்கியமாக இருக்கும். பால் கொடுக்கும் தாய்மார்களுக்கும் பேரிக்காய் உகந்தது. அடிக்கடி சாப்பிட தேவையான தாய்ப் பால் சுரக்கும்.

(1 vote)