இலந்தைப் பழம்

இலந்தைப்பழம் தமிழகத்தில் பலருக்கும் பிடித்த ஒரு பழம். இலந்தைப் பழத்தின் சுவைக்கு பலரும் அடிமை என்று கூட சொல்லலாம். மூக்கை துளைக்க கூடிய நல்ல ஒரு வாசனை வரும்போது இந்த பழம் நமக்கு உண்ணு தோன்றும் உணர்வை ஏற்படுத்தும்.

பொதுவாகவே இந்த பழத்தில் புழுக்கள் இருப்பது உண்டு. இதில் புளிப்பு சுவையுடனும் மற்றொன்று இனிப்பு சுவையுடனும் இரண்டு வகை இருப்பினும் இனிப்பு சுவையுடைய பழத்தை தான் உண்ண வேண்டும். இலந்தம் பழத்தில் பெரிதாக சீமை இலந்தை என்பதும் தற்பொழுது அதிகமாக வரக்கூடிய இலந்தைப்பழம். இது எப்போதாவதுதான் கிடைக்கும். ஆனால் எப்பொழுதும் கிடைக்கும் இனிப்பு சுவையுடைய இலந்தைப் பழத்தை உண்ண பல நன்மைகளை பெறமுடியும்.

இலந்தைப் பழத்தில் நார்சத்துக்கள், புரதம், வைட்டமின் மற்றும் தாது சத்துக்கள் அதிகளவில் உள்ளது. இந்தியப் பேரிச்சம் பழம் என்று கூட இதனை கூறுவதுண்டு. அந்தளவிற்கு இதில் சத்துக்கள் உள்ளது. இதனை வடையாக காரம், இனிப்பு கலந்து இலந்தை வடையாக உண்ண சுவை பிரமாதமாக இருக்கும். பலரும் இந்த சுவைக்கு அடிமை என்றே சொல்லலாம்.

மார்பு வலி

மார்பு வலி உடையவர்கள் இந்த பழத்தை அடிக்கடி உண்பதால் மார்புவலி அகன்றுவிடும். அஜீரணம் சார்ந்த பிரச்சனைகள் இருக்கும் பொழுதும் வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் உள்ளவர்களும் இந்த பழத்தை உண்ண நல்ல ஒரு பசி எடுக்கும். அஜீரணம் நீங்கும், ஜீரண உறுப்புகள் பலப்படும்.

உடல் பருமன் குறைய

உடல் பருமனை குறைக்கும் ஆற்றல் இந்த இலந்தை பழத்திற்கு உண்டு. இதிலிருக்கும் நார்சத்துக்களும், புரதமும் உடல் சர்க்கரை அளவை குறைத்து உடலில் தேங்கியிருக்கும் கழிவுகளையும் வெளியேற்றும். உடல் பருமனை குறைக்கும்.

நரம்புகள், மூளைக்கு சிறந்தது

உடலுக்கும் மனதிற்கும் புத்துணர்வை அளிக்கும் அற்புதமான பழம் இந்த இலந்தை பழம். நரம்புகளுக்கு பலத்தை அளித்து மூளை வளர்ச்சியை சீராக்கி, நினைவாற்றலையும் பெருக்கும் பழம்.

வீக்கங்கள் வலிகளை போக்கும்

உடலில் ஏற்படும் வீக்கங்கள் வலிகளுக்கு நல்ல ஒரு மருந்தாகவும் இந்த இழந்தைப் பழம் உள்ளது. உடலில் ஏற்படும் வீக்கங்களுக்கும் வலிகளுக்கும் காரணமாக இருக்கக்கூடிய தீமை செய்யும் நுண்ணுயிர்களை அழிக்கக் கூடிய ஆற்றல் நிறைந்தது இந்த பழம்.

ரத்தக் கொழுப்பை குறைக்கும்

ரத்த ஓட்டத்தை சீராக்கி ரத்த கொதிப்பை குறைக்க கூடிய ஆற்றல் நிறைந்த பழம் இந்த இழந்தை பழம். இந்த பழத்தில் அதிக அளவில் இருக்கும் பொட்டாசியம் சத்துகளும் மிகக் குறைந்த அளவில் இருக்கும் சோடியம் சத்துக்களும் ரத்தக் கொழுப்பை சீராக கூடியதாக இருக்கும்.

நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்க

நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்க கூடிய இந்த பழம் உடலுக்கு தேவையான பல சத்துக்களையும் கொண்டுள்ளது. வயிறு சம்பந்தமான பிரச்சனைகள், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளுக்கும் இந்த இலந்தை பழம் நல்லது.

இருமல், சளி நீங்க

இருமல், சளி, நீர்க்கோவை போன்ற தொந்தரவுகளுக்கு மிகச்சிறந்த ஒரு பழமாக இது உள்ளது.

எலும்புகளுக்கு பலமளிக்கும்

எலும்புகளுக்கு பலத்தை அளிக்கும் அற்புதமான பழம். மூட்டுகளில் வரக்கூடிய பிரச்சினைகளுக்கு அற்புதமான ஒரு பழம் இந்த இலந்த மரம் இதில் இருக்கக்கூடிய மெக்னீசியம் சத்துக்கள், காப்பர் சத்து, பொட்டாசியம் சத்துக்கள், மாங்கனீஸ் சத்து மற்றும் சுண்ணாம்புச்சத்து ஆரோக்கியமான எலும்புகளை உருவாக்க உதவக்கூடியது. மூட்டுவலி, எலும்பு தேய்மானம் போன்ற தொந்தரவுகளுக்கு சிறந்தது.

புற்றுநோயிலிருந்து நம்மை காக்கும்

புற்றுநோயில் இருந்து நம்மை காக்க உதவக்கூடியது. ரத்தத்தை சுத்திகரிக்க கூடிய ஒரு அற்புதமான ஆற்றலும் இந்த பழத்திற்கு உள்ளது. ரத்தத்தில் வரக்கூடிய பிரச்சனைகளுக்கும் சிறந்த ஒரு மருந்தாகவும் இந்த இழந்தை பழம் உள்ளது.

இளமையுடன் இருக்க

முதுமையை தள்ளிப் போடக் கூடிய ஆற்றலும் இளமையுடன் இருக்கக்வும் உதவும். வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்தது.

இனிப்பு சுவையுள்ள இந்த பழத்தில் உயிர்ச்சத்துக்களும் ஊட்டச்சத்துக்களும் ஏராளமாக உள்ளது. பலவிதமான ஊட்டச்சத்துக்களை கொண்டிருக்கக் கூடிய ஒரு அற்புதமான பழம்.

குறிப்பு : இலந்தைப் பழத்தை உண்ட உடன் நீர் அருந்தக்கூடாது. நீர் அருந்தினால் அது பேதியை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும். வாய்வு உடல்வாகு கொண்டவர்கள் இந்த பழத்தை உண்ணாமல் இருப்பது சிறந்தது.

(1 vote)