தண்ணீர் மருத்துவம்
நமது உடல் 70% தண்ணீரால் ஆனது. உலகமும் சுமார் 80% நீரால் ஆனது. உடலில் 10% நீர் குறைந்தால் நலம் கெடுகிறது. 20% குறைந்தால் உயிர் போகிறது. தாகம் எடுத்தால் மட்டுமே தண்ணீர் அருந்த வேண்டும் என்பது ஒரு பக்கம் இருந்தாலும் பொதுவாக இன்று தாகம் என உணர்வே பலருக்கும் இல்லை. பெரும்பாலோனோருக்கு மன உளைச்சல், மன நிம்மதியின்மை, வேலைப்பளு, எதிலும் அவசரம் போன்ற காரணங்களால் தண்ணீர் அருந்த வேண்டும் என்பதையே பலர் மறந்து போகின்றன. பலர் அந்த நினைவு வந்தாலும் அதனைப் புறக்கணித்து வேலையை செய்கின்றன. இதனால் உடலில் நீர் குறைபாடு ஏற்படுகிறது.
ஒரு நாளைக்கு ஒரு மனிதன் குறைந்தது 8 டம்ளர் நீர் அருந்தவேண்டும். தண்ணீர் போதிய அளவு வழங்காவிட்டால் சிறுநீரகம், சிறுநீரக இயக்கம் பாதிக்கப்படும். நீர் குறைந்து அதிலும் உப்புகள் சேர சிறுநீரகத்தில் சிறுநீரக கற்கள் உருவாகும். மலச்சிக்கல், மூலநோய் ஏற்படும். தலைவலி, நரம்பு தளர்ச்சி, பசியின்மை ஏற்படும். அதுமட்டுமல்லாமல் உடல் சளி தேங்கி நெஞ்சில் உறைந்து மார்புச்சளியாக தேங்க தொடங்கிவிடும். இது பல நோய்களையும் நுரையீரல் சார்ந்த பிரச்சனைகளையும் ஏற்படுத்த வழிவகுக்கக் கூடியதாக இருக்கும்.
தண்ணீர் அடிக்கடி பருகுவதால் ஏற்படும் நன்மைகள்
- உணவு செரிக்கும்
- சுரப்பிகள் தூண்டப்பட்டு நன்றாக சுரக்கும்
- இரத்தம் உடலெங்கும் பரவும் உடலில் நச்சுப் பொருட்கள் வியர்வை, சிறுநீர் வழியாக வெளியேறும். மேனி பளபளக்கும்.
- எலும்பு பலப்படும்.
வைரஸ் நோயால் அவதிப்படுபவர்கள், வாந்தி எடுப்பவர்கள் நீர் அளவு உடலில் குறைந்து இருக்கிறது. வயிற்றுப்போக்கால் இழப்பு ஏற்படுவதற்கும் இதுவே காரணமாகிறது. இந்த நிலையில் நிறைய நீரை அவ்வப்பொழுது சிறிது சிறிதாக பருகினால் உடலை பாதுகாக்க முடியும். கடும் காய்ச்சல் ஏற்பட்டு அதிக கெடுதல் நேராமல் இருக்கவும் தண்ணீர் அடிக்கடி பருகுவது மிகவும் நல்லது. அதிகமான ஆக்சிஜன் சத்துக்களை கொண்டது சுத்தமான சாதாரண தண்ணீர்.
மேலும்
மூலிகை தண்ணீர் எவ்வாறு தயாரிப்பது