தாய்ப் பால் சுரக்க

தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு இருக்கும் ஒரு மிக முக்கிய பிரச்சினை தாய்ப்பால் குறைவு. குழந்தைக்கு போதுமான பால் இல்லாததால் குழந்தையின் வளர்ச்சியில் பாதிப்பு, ஊட்டச் சத்து குறைபாடு, அழுகை என வருந்தும் தாய்மார்களுக்கு இயற்கையாக இந்த பாதிப்பிலிருந்து எவ்வாறு எளிமையாக தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கிறது என பார்ப்போம்.

  • தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க நினைக்கும் தாய்மார்கள் கடை உணவுகள், இரசாயனங்கள் கலந்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகளை முதலில் தவிர்க்கவேண்டும்.
  • சுத்தமான நீர், வெந்தய நீர் போன்றவற்றை அவ்வப்பொழுது அருந்தவேண்டும்.
  • வாரத்திக்கு மூன்று அல்லது நான்கு நாட்கள் முருங்கைக்கீரையை நெய் சேர்த்து பொரியல் செய்து உண்டுவர தாய்ப்பால் பெருகும்.

  • நூர்கோல், சுரைக்காய், பீர்க்கங்காய் போன்ற நீர்சத்துக்கள், நார்ச்சத்துக்கள், தாது சத்துக்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்ளவேண்டும்.
  • அம்மான் பச்சரிசி கீரையை அடிக்கடி உணவாக சமைத்து உன்ன பால் சுரப்பு அதிகரிக்கும். அம்மான் பச்சரிசி கீரையின் பூவை பாலுடன் காய்ச்சி இந்து நாட்கள் பருக தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.

  • பேரிச்சம்பழம், நெல்லிக்காய், புதினா, கொத்தமல்லியை அன்றாடம் உட்கொள்ள தாய்ப் பால் சுரப்பு அதிகரிக்கும்.
  • சீரகத்தை வறுத்து பொடித்து சம அளவு வெல்லம் சேர்த்து ஒவ்வொருநாளும் சாப்பிட தாய்ப் பால் பெருகும்.

  • அதிகமாக பழங்கள், காய்கறிகளை உட்கொள்ள உடல் ஆரோக்கியம் மேம்படுவதுடன் தாய்க்கும், குழந்தைக்கும் தேவையான சத்துக்களும் குறிப்பாக தாது சத்துக்களும் எளிதில் கிடைக்கும்.
  • பாரம்பரிய அரிசியான பூங்கார் அரிசியை உணவில் அடிக்கடி பயன்படுத்த தாய்ப்பால் சுரப்பு பெருகும். பூங்கார் அரிசியில் இட்லி, புட்டு, சாதம் என எல்லா உணவுகளையும் தயாரித்து உண்ண தாய்ப் பால் குறைவு என்ற குறையே இருக்காது.

இரண்டு வயதைக் கடந்த குழந்தைக்கு தாய்ப்பால் சுரப்பை நிறுத்தவும் சில வழிகளை பார்க்கலாம்.

(1 vote)