நோய் எதிர்ப்பு சக்தி தரும் உணவுகள்

இயற்கையின் அபரிவிதமான இரகசியங்களையும் புரிந்து கொள்ள முடியாத பல அபூர்வமான இயக்கங்களையும் கொண்டது தான் மனிதனின் உடல். இரண்டு அல்லது மூன்று கிலோ எடையுடன் பிறக்கும் குழந்தை 50 கிலோ எடையுள்ள பெரிய ஆளாக வளர்வதற்கு காரணம் நாம் உண்ணும் உணவு. நமது உடலில் இருக்கும் பிராண சக்தியும் நாம் உண்ணும் உணவும் உடல் நோய்களை எதிர்த்து ஒவ்வொரு நொடியும் இயங்கிக் கொண்டிருக்கிறது. அதன் அடையாளம் தான் சாதாரணமாக ஏதேனும் தூசி, கிருமிகள் தாக்கப்பட்டால் உடனடியாக தும்மல் இருமல் போன்ற வெளிபாடுகள்.

நமது உமிழ்நீர், தோல், தொண்டை தொடங்கி வெள்ளை அணுக்கள் என நமது உடலில் பல பல நோய் எதிர்ப்பு வீரர்கள் உள்ளனர். மேலும் இதனைப் பற்றி தெரிந்துக் கொள்ள நோய் எதிர்ப்பு ஆற்றல் என்ற பகுதியில் இணையலாம்.

பிறந்த குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாக இருக்கும் எனவே அதற்கு நோய் எதிர்ப்பு ஆற்றலைத் தரும் முதல் உணவாக தாய்ப்பால் உள்ளது. உயிர் ஆற்றலை பெருக்க கூடிய காரணிகள் அதிகம் கொண்ட உணவு தாய்ப்பால்.

அடுத்ததாக தாய்ப்பாலுக்கு அடுத்தபடியாக நோய் எதிர்ப்பு ஆற்றலை அளிக்கும் பிற உணவுகள்…

  • மஞ்சள், பச்சை, ஆரஞ்சு நிற பழங்களும் பச்சைக் காய்களும் நோய் எதிர்ப்பு ஆற்றலை வளர்க்கும் உணவுகள் ஆகும்.
  • எலுமிச்சை, கொய்யா, கமலா ஆரஞ்சு, சாத்துக்குடி போன்றவற்றில் வைட்டமின் சி மிகுதியாக உள்ளது.
  • பழங்களிலும் சமைக்காத உணவுகளிலும் அதிக அளவு பிராண சத்துக்கள் உள்ளது. உடலுக்கு தேவையான பலத்தையும் தெம்பையும் இவை அளிக்கும்.
  • பச்சைக் காய்கள் கீரைகளை சமைக்காமல் உண்பது மிகுந்த நன்மையைத் தரும்.
  • சமைத்தாலும் காய்களை பெரிய துண்டுகளாக நறுக்கி பயன்படுத்துவது அதில் இருக்கும் சத்துக்கள் வீணாவதை தடுக்கும்.
  • வறுத்தல், பொரித்தலை விட அவித்தல் முறை சிறந்தது.
  • அதிக அளவு தண்ணீர் குடிப்பதை ஒரு பழக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும். தேவைக்கேற்றவாறு தண்ணீர் குடிப்பதால் உடலில் தேங்கியிருக்கும் கழிவுகள் வெளியேறுவதும், அதனால் நோய் தொற்றுகள் உடலிலிருந்தும் வெளியேறும்.
  • நல்ல ஒரு இரவு தூக்கம் அபரிவிதமான நோய் எதிர்ப்பு ஆற்றலை அளிக்கக்கூடியது.
  • நோயின்றி ஆரோக்கியமாக வாழ பழங்களும் பச்சைக் காய்களும் அன்றாடம் நமது உணவில் அதிகம் இருக்குமாறு பார்த்துக் கொள்வது அவசியம்.
(1 vote)