அன்றாடம் ஒவ்வொரு வீட்டிலும் பயன்படுத்தப்படும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்களை எவ்வாறு தேர்ந்தெடுப்பது..
- தக்காளி : நாட்டு தக்காளி வாங்குவது சிறந்தது. அதன் மேல்தோல் லேசாக மிருதுவாக இருக்கும்.
- முருங்கைக்காய் : முருங்கைக்காயை சிறிது கைகளால் முறுக்கினால், எளிதாக வளைந்தால் அது நல்ல முருங்கைகாய்.
- பூண்டு : பல் பல்லாக வெளியே தெரிவது நல்லது. வாங்கலாம்.
- வாழை தண்டு : கிள்ளிப்பார்க்க இலேசாக இளம் தண்டாக இருக்கவேண்டும். மேல் பகுதி நார் அதிகம் இல்லாமலும் உள்ளிருக்கும் தண்டு பகுதி சிறுத்தும் இருப்பதாக பார்த்து வாங்க வேண்டும்.
- கோவைக்காய் : முழுக்க பச்சையாக சற்று கடினமாக இருக்க பார்த்து வாங்க வேண்டும். சிவப்பு லேசாக இருந்தாலும் வாங்க வேண்டாம். பழுத்து ருசி இல்லாமல் இருக்கும்.
- சின்ன வெங்காயம் : பழைய வெங்காயம் வாங்குவதே நல்லது. இரண்டு பல் இருப்பதாக, முத்து முத்தாக தெளிவாக இருப்பதை வாங்கவும். அதிலும் நாட்டு ராகம் காரம் குறைவாக இருக்க சுவையாக இருக்கும்.
- மாங்காய்– தேங்காயை காதருகே வைத்து தட்டி பார்ப்பது போல மாங்காயும் தட்டி பார்க்கவும். சத்தம் வரும். அத்தகைய மாங்காயில் கொட்டை சிறிதாக இருக்கும்.
- பீர்க்கங்காய் : அடிப் பகுதி குண்டாக இல்லாமல் காய் முழுதும் ஒரே சைசில் இருக்கு மாறு பார்த்து வாங்குவது நல்லது. நார்ச்சத்து உள்ள மிக நல்ல காய் இது.
- புடலங்காய் : நீடுபுடலை சுவையும் சத்துக்களும் மிக்கதாக இருக்கும். கெட்டியாக வாங்கவும். அப்போதுதான் விதைப்பகுதி குறைவாக, சதை பகுதி அதிகமாக இருக்கும்.
- பெரிய வெங்காயம் : மேல் (குடுமி) பகுதியில் தண்டு பெரிதாக இல்லாமல் பார்த்து வாங்கவும்
- இஞ்சி : லேசாக கீறி பார்க்கும் போது தோல் பெயர்ந்து வருவது நல்லது. நார் பகுதி குறைவாக இருக்கும்.
- கத்திரிக்காய் : தமிழகத்தில் நாட்டு ரக கத்திரிக்கைகள் பல உள்ளன. அவற்றை அந்தந்த பருவக்காலத்திற்கு ஏற்ப வாங்குவது சிறந்த சுவையும் சத்துக்களும் நிரந்ததாக இருக்கும்.
- சுரைக்காய் : நகத்தால் அழுத்தினால் நகம் உள்ளே இறங்க வேண்டும். அப்போது தான் இளசு என்று அர்த்தம்.
- அவரை: தொட்டு பார்த்து விதைகள் பெரிதாக இருக்கும் காய்கள் தவிர்ப்பது நல்லது. இளசாக வாங்கினால் நார் அதிகம் இருக்காது.
- பாகற்காய்: பெரிய பாகற்காயில் உருண்டையை விட, தட்டையா ன நீண்ட காய் நல்லது. அதைவிட நல்லது மிதிப்பகல் எனப்படும் சிறு காட்டுப் பாகற்காய். புதிதாக இருக்கும் பொழுதே சமைக்க கசப்புச்சுவையே தெரியாது.
- வாழைப்பூ : மேல் இதழை விரித்து பூக்கள் கருப்பாகாமல் வெளிர் நிறத்தில் இருக்கிறதா என பார்க்கவும். அப்படி இருந்தால் நல்ல பூ.
- மொச்சை :கொட்டை பெரிதாக தெரியும் காய் பார்த்து வாங்கவும். சற்று மேல்தூள் நிறம்மாறியிருந்தால் நன்று.
- சௌசௌ : வாய் போன்ற பகுதி விரிசல் பெரிதாக இல்லாத படி பார்த்து வாங்கவும். விரிசல் இருந்தால் முற்றியகாய்.
- முள்ளங்கி: லேசாக கீற தோல் மென்மையாக இருந்தால் அது இளங்காய், நல்ல காய்.
- வெள்ளரி : மேல் நகத்தால் குத்தி பார்த்தால் நகம் உள்ளே இறங்கினால், நல்ல காய். விதைகள் குறைவாக இருக்கும்
- பச்சை மிளகாய் : நீளமானது சற்று காரம் குறைவாக இருக்கும். சற்றே குண்டானது தான் காரம் தூக்கலாக வாசனையும் பிரமாதமாக இருக்கும்.