தேன் நெல்லி / Honey Amla

இயற்கையில் நமது நாட்டு நெல்லி துவர்ப்புடன் சேர்ந்த சிறு கசப்பு மற்றும் புளிப்பு சுவை கொண்டது. சாதாரணமாக இன்று வருடம் முழுவதும் சந்தையில் கிடைக்கும் நெல்லிக்காய் ஒட்டு ரக நெல்லிக்காய் அவற்றை தவிர்த்து நமது நாட்டு ரக நெல்லிக்காய் மரங்களில் இருந்து வருடத்திற்கு ஒரு பருவத்தில் அதாவது மார்கழி, தை மாதங்களில் கிடைக்கும் நாட்டு நெல்லிக்காயை நமது முன்னோர்கள் அதன் சத்துக்களை குறையாமல் அதிகரித்து பக்குவப்படுத்தி சேமித்துவைத்த உணவே தேன் நெல்லிக்காய்.

அற்புத சத்துக்களைக் கொண்ட நெல்லிக்காயையும், தேனையும் கலந்து சாப்பிட்டு வந்தால் இதன் நன்மைகள் என்னவென்று தெரியுமா?

நெல்லிக்காய் அதிக விட்டமின் சி மற்றும் சக்தி மிகுந்த ஆன்டிஆக்ஸிடென்ட் பெற்றவை. இந்த நெல்லிக்காய் ஒரு ஆப்பிளுக்கு சமம் என்பது  மட்டுமல்ல, ஒரு நெல்லிக்காய் ஒரு சொட்டு ரத்தத்திற்கு உத்திரவாதம் தரும்.

தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டால் போதும் உங்கள்  உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பலமடங்கு பெரும்.

தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை தினமும் ஒன்று என சாப்பிட்டு வந்தால்..

இரத்த அணுக்களின் அளவு அதிகரிக்கும். இரத்த சோகை நீங்கும்‌ ரத்தம் சுத்திகரிக்கப்படும்.

தேன் நெல்லிக்காய் பயன்கள்

  • இதயத்தில் உள்ள தசைகள் வலிமை அடையும்.
  • முகம் பொலிவு பெறும்
  • ரோம கால்கள் வலுவடைந்து முடிகொட்டுவது தவிர்க்கப்படும்.
  • கண்களில் எரிச்சல், நீர் வடிதல், கண்கள் சிவப்பாதல் போன்றவை குணமாகும்.
  • தினமும் ஒரு வேளை தேன்நெல்லி சாப்பிட்டு வந்தால் தொண்டைப் புண்ணால் அவதிப்படுபவர்களுக்கு நிவாரணம் கிடைக்கும்.
  • சளி தொல்லை உள்ளவர்களுக்கு உடலில் உள்ள சளி அனைத்தும் வெளியேறும்.

  • சிறுநீர் மற்றும் சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகளிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.
  • அசிடிட்டி சம்பந்த பிரச்சனை உள்ளவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.
  • சில பெண்களுக்கு ஏற்படும் அதிக வெள்ளைப்படுதலைத் தடுக்கலாம்
  • கர்ப்ப்பாய் பாதிப்புகள் நீங்கி சீரான மாதவிலக்கு உண்டாகும்.

வீட்டிலேயே தேன் நெல்லிக்காய் எவ்வாறு செய்வது…

https://www.youtube.com/watch?v=ZVsHLQ4AP84

(1 vote)