ஹீமோகுளோபின் அளவு குறைவாக உள்ளது. அதனால் படபடப்பு, மயக்கம், மூச்சு விடுவதில் சிரமம், சுறுசுறுப்பின்மை, பிற சத்து குறைபாடுகள் என பலர் சொல்வதை கேட்டிருப்போம். அது என்ன ஹீமோகுளோபின்? அதனை எவ்வாறு பெறுவது? என பார்ப்போம்.
ஹீமோகுளோபின் என்பது இரத்த சிவப்பணுக்களில் உள்ள புரத மூலக்கூறு ஆகும். இவை இரும்பு சத்துக்களுடன் ஆக்ஸிஜன் சத்துக்களை எடுத்துச்செல்லும். சுருக்கமாக இதனை Hb அல்லது Hgb என்பதுண்டு. இது நுரையீரலில் இருந்து உடலின் திசுக்களுக்கு ஆக்ஸிஜனைக் கொண்டு செல்கிறது, அதேப்போல் திசுக்களில் இருந்தும் கார்பன் டை ஆக்சைடை திரும்பப் பெறுகிறது.
ஒருவரின் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருந்தால் இரத்த சோகை ஏற்படும். இதனால் அவர்களின் செயல் மற்றும் இயக்கம் பாதிக்கப்படும். மிகவும் சோர்வாக காணப்படுவார்கள். மயக்கம், மூச்சு விடுவதில் சிரமம், சுறுசுறுப்பின்மை போன்ற தொந்தரவுகள் ஏற்படும். மேலும் இதனால் இரும்பு சத்துக்கள் குறைபாடும், பிற சத்து (வைட்டமின், தாது சத்து) குறைபாடும் ஏற்படும்.
எளிதாக மற்றும் மலிவாக கிடைக்கும் கருவேப்பிலை, முருங்கைக்கீரை, சுண்டைக்காய், பீட்ரூட், குமுட்டி கீரை, பிற கீரைகள், மணத்தக்காளி வத்தல், பாசிப்பயறு, வெல்லம், பனை வெல்லம் (கருப்பட்டி), எள்ளுருண்டை, கடலை உருண்டை, விதையுள்ள கருப்பு திராட்சை, நாட்டு மாதுளை, நாட்டுப் பேரீட்சை, பிரண்டை, முள்ளங்கி, கருப்பட்டி உளுந்துக்களி, உளுந்து, கேழ்வரகு, நெல்லிக்காய்ச் சாறு, பழங்கள், தேங்காய், எலுமிச்சை, செவ்வாழை.