பாரம்பரிய அரிசிகளின் வகையில் சர்க்கரை வியாதிக்கு ஏற்ற அரிசி காட்டுயானம் அரிசி. ஆன்டி ஆக்ஸிடென்ட் குணங்களை பெற்ற இந்த அரிசியில் பலவகையான வைட்டமின் சத்துக்களும், தாது உப்புக்களும் உள்ளது.
சர்க்கரை வியாதி உள்ளவர்கள் ஒரு மண்டலம் இந்த இளம் சிகப்பு மோட்டா ரக காட்டுயானம் அரிசியினை உண்ண நல்ல பலனைப் பெறலாம்.
தேவையான பொருட்கள்
1 கப் காட்டுயானம் அரிசி
செய்முறை
காட்டுயானம் அரிசியினை முதலில் சுமார் இரண்டு முதல் ஆறு மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும்.
பின்னர் ஒரு மண்பாத்திரத்தில் ஒரு கப் அரிசிக்கு நன்கு முதல் ஐந்து கப் தண்ணீர் வரை சேர்த்து நன்கு கொதிவந்த பின் ஊறிய காட்டுயானம் அரிசியினை சேர்க்கவும்.
பத்து நிமிடத்திற்கு பின் சிறுதீயில் சுமார் இருபது முதல் முப்பது நிமிடம் வரை வேகவைத்து பின் தீயை அணைத்து அரிசியினை சிறிது நேரம் மூடிவைக்கவும்.
பின் நன்கு வெந்து மலர்ந்திருக்கும் சிகப்பு காட்டுயாணம் சாதத்தினை அனைத்து குழம்பு, கூட்டு, காய்கறியுடனும் சேர்த்து உண்ணலாம்.
காட்டுயானம் அரிசி சாதம்
சர்க்கரை வியாதி உள்ளவர்கள் ஒரு மண்டலம் இந்த இளம் சிகப்பு மோட்டா ரக காட்டுயானம் அரிசியினை உண்ண நல்ல பலனைப் பெறலாம்.
⏲️ ஆயத்த நேரம்
6 hrs
⏲️ சமைக்கும் நேரம்
45 mins
🍴 பரிமாறும் அளவு
2
🍲 உணவு
சோறு
தேவையான பொருட்கள்
- 1 கப் காட்டுயானம் அரிசி
செய்முறை
- காட்டுயானம் அரிசியினை முதலில் சுமார் இரண்டு முதல் ஆறு மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும்.
- பின்னர் ஒரு மண்பாத்திரத்தில் ஒரு கப் அரிசிக்கு நன்கு முதல் ஐந்து கப் தண்ணீர் வரை சேர்த்து நன்கு கொதிவந்த பின் ஊறிய காட்டுயானம் அரிசியினை சேர்க்கவும்.
- பத்து நிமிடத்திற்கு பின் சிறுதீயில் சுமார் இருபது முதல் முப்பது நிமிடம் வரை வேகவைத்து பின் தீயை அணைத்து அரிசியினை சிறிது நேரம் மூடிவைக்கவும்.
- பின் நன்கு வெந்து மலர்ந்திருக்கும் சிகப்பு காட்டுயாணம் சாதத்தினை அனைத்து குழம்பு, கூட்டு, காய்கறியுடனும் சேர்த்து உண்ணலாம்.