Cook Brown Rice in Tamil

பழுப்பு அரிசி / கைக்குத்தல் அரிசி சமைக்கும் முறை – சொர்ணமசூரி அரிசி

How to Cook Brown Rice Sonamasoori / Organic Handpound Rice Cooking / Kaikuthal Rice

கைக்குத்தல் அரிசி அல்லது பழுப்பு அரிசி என்பது பட்டை தீட்டப்படாத அரிசி. பொதுவாக வெள்ளை அரிசியை பட்டை தீட்டாமல் பயன்படுத்துவதையே கைக்குத்தல் அரிசி என்கிறோம். கைக்குத்தல் அரிசியில் பல சத்துக்கள் உள்ளது.

குறிப்பாக புரதம், வைட்டமின், நார்சத்துக்கள், தாது சத்துக்கள் என பல சத்துக்களும் கொண்டது. சத்து குறைபாடு, நீரிழிவு, உடல் பருமன், சிறுநீரகம், கல்லீரல் தொந்தரவுகள், மலச்சிக்கல், தைராய்டு, முறையற்ற மாதவிடாய், கருப்பை தொந்தரவுகள், குழந்தையின்மை, மலட்டுத்தன்மை போன்ற நோய்களுக்கு சிறந்த நிவாரணத்தையும் அளிக்கும் அரிசியாக இவை உள்ளது.

இன்று சந்தையில் சொர்ணமசூரி, கிச்சிலி சம்பா போன்ற பாரம்பரிய அரிசிகள் பட்டை தீட்டாமல் பழுப்பு நிறத்தில் கைக்குத்தல் முறையில் எளிதாக கிடைக்கக்கூடிய அரிசிகளாகவும் உள்ளது, இவற்றில் இந்த பதிவில் சொர்ணமசூரி அரிசியை எவ்வாறு எளிமையாக மண்பானையில் சமைப்பது என்று பார்க்கலாம். மண்பானையை எவ்வாறு எளிமையாக பழக்குவது என தெரிந்துக்கொள்ள – How to Season Mudpot easily in Tamil என்ற காணொளியில் தெரிந்துக்கொள்ளலாம்

முதலில் ஒரு கப் பட்டை தீட்டப்படாத சொர்ணமசூரி அரிசியை எடுத்துக்கொள்வோம். அதனை நன்கு கழுவி குறைந்தது அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை ஊறவைக்கவேண்டும். அரிசியை எவ்வாறு கழுவுவது / அரிசியை கழுவ வேண்டுமா என தெரிந்துக்கொள்ள – சமைப்பதற்கு முன் அரிசியை கழுவவேண்டுமா? வடிக்க வேண்டுமா? How to Wash Rice / Reduce ARSENIC IN RICE என்ற காணொளியில் தெரிந்துக்கொள்ளலாம்.

பின் ஒரு மண்சட்டியில் ஒரு பங்கு அரிசிக்கு மூன்றரை பங்கு தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைக்கவும். சிறு கொதிவந்தவுடன் அரிசியை சேர்த்து வேகவிடவும். நன்கு கொதிவந்தவுடன் அடுப்பை மிதமான தீயில் வைத்து வேகவிடவும்.

குறைந்தது அரை மணி நேரம் மிதமான தீயில் வேகவிட அரிசி நன்கு வெந்து கைக்குத்தல் சொர்ணமசூரி சாதம் தயாராக இருக்கும். எளிமையாக தயரிக்கக்கூடியது. அன்றாடன் உணவிற்கு ஏற்றது. குழம்பு, ரசம், மோர் என அனைத்துடனும் சேர்த்து உண்ண சத்தானதாகவும் சுவையானதாகவும் இருக்கும்.

5 from 1 vote

சொர்ணமசூரி கைக்குத்தல் அரிசி சாதம் சமைக்கும் முறை

சொர்ணமசூரி கைக்குத்தல் அரிசி சாதத்தில் பல சத்துக்கள் உள்ளது. வைட்டமின், புரதம், நார்சத்துக்கள் என உடலுக்கு தேவையான பல சத்துக்கள் நிறைந்த உணவு. நீரிழிவு உட்பட பல நோய்களுக்கு சிறந்த மருந்தாக உள்ளது.
ஆயத்த நேரம் : – 1 hour
சமைக்கும் நேரம் : – 35 minutes
மொத்த நேரம் : – 1 hour 35 minutes

உபகரணங்கள்

  • மண் சட்டி (Mud Pot)

தேவையான பொருட்கள்

  • 1 கப் சொர்ணமசூரி அரிசி

செய்முறை

  • பின் ஒரு மண்சட்டியில் ஒரு பங்கு அரிசிக்கு மூன்றரை பங்கு தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைக்கவும். சிறு கொதிவந்தவுடன் அரிசியை சேர்த்து வேகவிடவும்.
  • நன்கு கொதிவந்தவுடன் அடுப்பை மிதமான தீயில் வைத்து வேகவிடவும்.
  • குறைந்தது அரை மணி நேரம் மிதமான தீயில் வேகவிட அரிசி நன்கு வெந்து கைக்குத்தல் சொர்ணமசூரி சாதம் தயாராக இருக்கும்.
  • எளிமையாக தயரிக்கக்கூடியது. அன்றாடன் உணவிற்கு ஏற்றது. குழம்பு, ரசம், மோர் என அனைத்துடனும் சேர்த்து உண்ண சத்தானதாகவும் சுவையானதாகவும் இருக்கும்.
https://youtu.be/V4cycn_cEsQ

1 thought on “Cook Brown Rice in Tamil

Comments are closed.