அன்றாடம் காலையில் தேன் இஞ்சி சாப்பிட உடலில் பல நோய்கள் மாயமாக மறையும். இரத்த வெள்ளை அணுக்களை அதிகரிக்கும் இந்த தேன் இஞ்சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலில் ஏற்படும் சிறு தொந்தரவுகள் தொடங்கி நாள்பட்ட நோய்களையும் விரட்டும் அபார சக்தி கொண்டது.
வீட்டிலேயே இந்த தேன் இஞ்சியை தயாரித்து அன்றாடம் சிறிதளவு காலையில் மட்டும் சாப்பிட்டு வர ஒரு மாதத்தில் நல்ல பலனை பெறலாம்.
தேன் இஞ்சி செய்ய
தேவையான பொருட்கள்
- ஒரு கப் தேன்
- ஒரு கப் இஞ்சி
செய்முறை
- முதலில் இஞ்சியை சுத்தமாக கழுவி, ஈரம் போகத் துடைத்து தோல் சீவி கொள்ள வேண்டும்.
- பின் இஞ்சியை சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
- நறுக்கிய இஞ்சியை ஒரு கண்ணாடி பாட்டிலில் அரைப்பங்கு வரை சேர்க்கவும்.
- அதன் பின் இஞ்சி மூழ்கும் அளவு சுத்தமான தேன் சேர்க்கவும்.
- இதனை நன்கு கலந்து விட்டு ஒரு துணியைக் கொண்டு மூடிவிட்டு பத்து நாட்கள் வெயிலில் வைக்கவும். இவ்வாறு செய்வதால் இஞ்சி துண்டுகள் நன்கு தேனில் ஊறி சாப்பிட தயாராகும்.
- பத்து நாட்களுக்குப் பின் ஒவ்வொரு நாளும் காலையில் மட்டும் ஒரு ஸ்பூன் அளவு சாப்பிட்டு வர நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், உடல் கழிவுகள் நீங்கும், இரத்த ஓட்டம் சீராகும், மலச்சிக்கல், வாதம், அஜீரணம், நுரையீரல், கல்லீரல், வயிறு சம்பந்தமான நோய்கள் அகலும்.
தேன் இஞ்சி பயன்கள்
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
ஆயுளை பெருக்கும்
வாத நோய்களுக்கு சிறந்தது
உடல் கழிவுகளை நீக்கும்
இரத்தத்தை சுத்தமாக்கும்
பித்தம் தணியும்
நன்றி.