தேனீக்களில் மலைத்தேனீ, கொம்புத்தேனீ, கொசுத்தேனீ, இந்தியன் தேனீ, இத்தாலியன் தேனீ என பல வகைகள் உள்ளது. இதில் மலைத்தேனீ என்பது மலைப் பகுதிகளில் தேனை சேகரிப்பது. இத்தாலியன் தேனீயும், இந்தியன் தேனீயும் இன்று பெருமளவில் தேனீ பேட்டிகள் மூலம் தேனை சேகரிக்கும் முறையாக உள்ளது.
இதில் மலைத்தேன் அதிக மருத்துவகுணங்களை பெற்றது. மற்றவை அவை தேனெடுக்கும் மலர்கள், மரங்களில் மருத்துவகுணங்கள், அந்த நிலத்தின் தன்மை போன்றவற்றை சார்ந்தது.
பொதுவாக பலமலர் தேன் அதிகளவில் விற்பனையாகும் ஒன்று. பலமலர் தேன் என்பது தேனீக்கள் பல மலர்களையும், கனிகளையும் நுகர்ந்து இனிப்பினை சேகரித்து தேனாக கொள்வது.
அதேபோல் ஒருமலர் தேனும் உள்ளது. குறைந்தது சுற்றுவட்டாரத்தில் ஐந்து கிலோமீட்டர் வரை எதோ ஒரே ஒரு வகையான மலர்கள் இருக்க அது ஒருமலர் தேன். அதாவது பத்து கிலோமீட்டர் வரை வெறும் நாவல் மரங்களோ அல்லது வேப்ப மரங்களோ இருக்க அதிலுள்ள பூக்களை மட்டும் தேனீக்கள் சேகரிப்பது நாவல் தேன், வேம்புத்தேன் என்றெல்லாம் வகைப்படும். இவற்றின் மருத்துவகுணங்கள், நிறம், அடர்த்தி, சுவை போன்றவை அந்த மரத்தின் பூக்களைக் கொண்டு மாறுபடும்.
முருங்கைத்தேன் என்பது முருங்கை மரங்கள் அதிகமாக இருக்கும் இடங்களில் இருந்து எடுக்கப்படுவது. அதாவது இரண்டு கிலோமீட்டர் சுற்றுவட்டாரத்தில் அறுபது சதவீதம் ஒரே மரங்கள் இருக்க அவற்றிலிருந்து தேனிபெட்டிக்களை வைத்து தேனினை எடுத்தால் அதற்கு அந்த குறிப்பிட்ட மலரின் தேன் என்று பெயர்.
இந்த தேன்களுக்கு சுவை, நிறம், மணம், குணம் (குறிப்பாக மருத்துவகுணம்) என அனைத்தும் வேறுபட்டிருக்கும். இப்படி நாவல்தேன், தும்பைத்தேன், வேம்புத்தேன், குங்குமப்பூ தேன், துளசி தேன் என பல வித தேன்களும் உள்ளது.
உலகில் பலவகையான தேனீக்கள் உள்ளது. இடம், தட்பவெப்பம், மண், மலர்கள் சார்ந்து தேனீக்களின் உடலமைப்பு அமையும். இந்த அமைப்புகளுடன் அவை வாழும் இடத்தையும் பொறுத்து தேனீக்களின் பெயர்கள் அமையப்பெற்றுள்ளது. தேனீக்கள் மட்டுமல்லாது தேனீக்கள் சேகரிக்கும் தேனினை பக்குவப்படுத்தும் முறைகளுக்கும் அவற்றை சேமித்து வைக்கும் முறைகளுக்கும் ஏகப்பட்ட பெயர்கள் உள்ளது. உதாரணத்திற்கு இஞ்சி தேன், நெல்லி தேன் என பல வித தேன்களும் உள்ளது.
மேலும் தேனைப்பற்றியும், தேனின் மருத்துவகுணங்கள், தேனிப்பெட்டி தேனின் வகைகள், எவ்வாறு தேனை தரம் பார்ப்பது, தேனீக்கள், தேனை உண்ணும் முறை என பல தகவல்களை தேன் – பயன்கள், வகைகள், மருத்துவகுணங்கள்… என்ற பகுதியில் பார்க்கலாம்.