முப்பது நாற்பது வயதைக் கடந்த பெண்களுக்கு அடிக்கடி இடுப்பு வலி ஏற்படுவதை கேள்விப்பட்டிருப்போம். இதற்கு பல பல காரணங்கள் இருந்தாலும் சத்தான ஆகாரமும், சீரான உணவுப் பழக்கமும் பெருமளவில் இதனை குறைக்க உதவும். குறிப்பாக அன்றாடம் யோகம், தியானம் போன்ற பயிற்சிகளை தவறாமல் மேற்கொள்ள நல்ல பலனையும் தொடர்ந்து பெற முடியும்.
இடுப்பு வலி குணமாக
பெண்களுக்கு ஏற்படும் இடுப்பு வலி குணமாக வெள்ளைப் பூண்டு மற்றும் கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வர விரைவில் பலன் கிடைக்கும்.
இடுப்பில் புண் குணமாக
சிலநேரங்களில் பெண்களுக்கு இடுப்பில் புண் கொப்பளங்கள் வருவதை பார்க்கலாம். இதனால் அவர்கள் அவதியுறுவதையும் அதிகமாக அரிப்பு ஏற்பட அதனால் எரிச்சல், வலி ஏற்படுவதையும் பார்க்க முடியும். இதற்கு கடுக்காயை கல்லில் உரசி தடவி வந்தால் குணமாகும். கடுக்காய்க்கு இரத்தத்தை சுத்தமாக்கும் குணமும் உண்டு.
விலாவலி தீர
இள வயது பெண்கள், வயதான பெண்களுக்கு விலாவில் வலி ஏற்படுவதையும் அதனால் அவர்கள் துன்புறுவதையும் பார்க்கலாம். இதற்கு துளசி இலை, இஞ்சி, தாமரை வேர் ஆகியவற்றை சேர்த்து அரைத்து கொதிக்கவைத்து பற்று போட விலாவலி தீரும்.
இடுப்பு வலி தீர
இடுப்பு வலி தீர விழுதி இலை சாறுடன் நல்லெண்ணெய் கலந்து ஐந்து மிலி அளவு மூன்று நாட்களுக்கு சாப்பிட வலி தீரும்.