வாய்க்கும் வயிற்றிற்கும் இடையில் ஏற்படும் தசை சுருக்கதால் ஏற்படும் விளைவு தான் விக்கல். செரிமானக் கோளாறு, ஈரல் அழற்சி, சிறுநீரக கோளாறு, கணைய அழற்சி, யூரிக் அமிலம் மிகுதி, சின்னம்மை, காமாலை போன்றவற்றால் வயிற்று சுவர் தசை சுருக்கம் ஏற்பட்டு விக்கல் ஏற்படுகிறது.
விக்கல் தீர
- தேனில் கடுக்காய் தோல் தூள் சேர்த்து நன்கு குழைத்து உண்ணலாம்.
- சீரகத்தை நீரில் சுண்டக் காய்ச்சி பாதியாக சுண்டியதும் வடிகட்டி தேன் கலந்து பருகலாம்.
- மிளகுத் தூள், நெய், சர்க்கரை சேர்த்து குழைத்து சப்பி உண்ண விரைவில் தீரும்.
- தேன் கலந்து நெல்லிக்காய் ஜூஸ் பருக உடனே மறையும்.
- பொடி செய்த பட்டை, சுக்கு சேர்த்து சம அளவு தேனில் குழைத்து உண்ணலாம்.
- சிறிது இனிப்பு சர்க்கரையை வாயில் போட்டு மெல்ல சப்பி உண்ண உடனே விக்கல் தீரும்.