தமிழகத்தில் பல இடங்களிலும் வீடுகளிலும் பார்க்கக் கூடிய மலர்செடி செம்பருத்தி. ஐந்து இதழ் கொண்ட செம்பருத்தி / செம்பருத்தை பல மருத்துவ குணங்களைக் கொண்ட அதிசய மலர். இருதய நோய் உட்பட பல நோய்களை வராமல் தடுக்கும் ஆற்றல் நிறைந்த மலர்.
உடல் உஷ்ணத்தையும் மலச்சிக்கலையும் உடனடியாக போக்கும் அற்புத மருந்து இந்த செம்பரத்தை பூ. அன்றாடம் இந்த மலர்களை உண்பதால் எண்ணற்ற பலன்களை பெறமுடியும். அன்றாடம் மலர் கிடைக்காத நிலையில் உள்ளவர்கள் கிடைக்கும் காலத்தில் அல்லது நேரத்தில் மலர்களை பறித்து சர்பத்தாக தயாரித்து வைத்துக் கொண்டு அன்றாடம் பருக பல நன்மைகள் ஏற்படும். பல நோய்களுக்கும் சிறந்த மருந்தாக இது இருக்கும்.
செம்பருத்தி சர்பத் தயாரிக்க தேவையானவை
- 100 செம்பருத்தி பூக்கள்
- 1 1/2 லிட்டர் நீர்
- 1 1/2 கிலோ சீனாக்கற்கண்டு
செம்பருத்தி சர்பத் தயாரிக்கும் முறை
- சுத்தமான காம்பு மற்றும் நடுப்பகுதி நீக்கியை செம்பருத்தி பூக்கள் நூறு எடுத்து அவற்றை ஒன்றரை லிட்டர் சுத்தமான நீர் விட்டுக் காய்ச்ச வேண்டும்.
- நீரின் அளவு பாதியாகும் வரை காய்ச்ச வேண்டும்.
- பின் அவற்றில் ஒன்றரை கிலோ அளவு சீனா கற்கண்டு சேர்த்து சர்பத்தாக நன்றாக காய்ச்ச வேண்டும்.
- இவ்வாறு செய்ய செம்பருத்தி சர்பத் தயார்.
- பின் செம்பருத்தி சர்பத்தை பாட்டிலில் சேமித்து வைத்து பயன்படுத்தலாம்.
செம்பருத்தி சர்பத் பயன்படுத்தும் முறை
தயாரித்து வைத்திருக்கும் செம்பருத்தி சர்பத்தை அரை அவுன்ஸ் என்ற விதத்தில் தேவைகேற்ப நீர் சேர்த்து காலை மாலை என பருகிவர சிறந்த பலனைப் பெறலாம். குழந்தைகள் பெரியவர்கள் என அனைவரும் எடுத்துக் கொள்ளலாம்.
செம்பருத்தி சர்பத் பருகுவதால் ஏற்படும் பயன்கள்
- மன சோர்வு தீரும்
- மனம் புத்துணர்வு பெரும்
- முகப்பொலிவு கூடும்
- உடல் உஷ்ணம் குறையும்
- கணைச் சூடு தீரும்
- உடல் எடை சீராகும்
- மலச்சிக்கல் மறையும்