செம்பருத்தி குல்கந்து உடலுக்கும் மனதிற்கும் புத்துணர்வையும், உற்சாகத்தையும் அளிக்க சிறந்தது. ஐந்து இதழ் கொண்ட செம்பருத்தை பூக்கள் உடலுக்கும் மனதிற்கும் சிறந்தது. அன்றாடம் ஏதேனும் ஒரு வகையில் இதனை உட்கொள்ள நல்ல பலன் கிடைக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சிறந்தது இது.
தேனில் செம்பருத்தை இதழ்களை ஊறவைத்து உட்கொள்வதால் இந்த செம்பருத்தி குல்கந்து அதிக மருத்துவகுணங்கள் நமக்கு அளிக்கிறது. இரத்தத்தை சுத்திகரிப்பது, உடல் கழிவுகளை வெளியேற்றுவது மட்டுமல்லாமல் உடலுக்கு பலத்தையும் தெம்பையும் அளிக்கும். இரசாயனங்கள், பதப்படுத்திகள் என எதுவும் சேர்க்காமல் எளிதாக இதனை வீட்டில் தயாரித்து பயன்படுத்த சிறந்த பலனைப் பெற முடியும்.
செம்பருத்தி குல்கந்து தயாரிக்க தேவையானவை
- 15 – 20 செம்பருத்தி பூக்கள்
- 1 கப் தேன்
செம்பருத்தி குல்கந்து தயாரிக்கும் முறை
- சுத்தமான செம்பருத்தி பூக்களை எடுத்துக் கொள்ள வேண்டும். அவற்றின் காம்பையும் நடுப்பகுதியையும் நீக்கி, இதழ்களை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
- மெல்லிய இந்த இதழ்களை ஒரு கண்ணாடி பாட்டிலில் பரப்பி அவற்றின் மேல் தேன் ஊற்றி ஒரு வாரம் முதல் பத்து நாட்கள் வரை வெயிலில் வைக்க வேண்டும்.
- அன்றாடம் ஈரமில்லாத ஒரு ஸ்பூனைக் கொண்டு நன்கு கலந்து விடவேண்டும்.
- இரவில் ஒரு துணியைக் கொண்டு பத்து நாட்கள் மூடிவைக்க வேண்டும்.
- பத்து நாட்களில் செம்பருத்தி பூக்கள் நன்கு தேனில் ஊறி சுவையான நல்ல சத்துக்கள் நிறைந்த செம்பருத்தி குல்கந்து தயார்.
- வேறொரு பாட்டிலில் சிறிது குங்குமப்பூ சேர்த்து பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளலாம்.
செம்பருத்தி குல்கந்து பயன்படுத்தும் முறை
தயாரித்து வாய்த்த செம்பருத்தி குல்கந்தை ஒரு ஸ்பூன் அளவு அன்றாடம் சாப்பிட்டு வர ஆரோக்கியம் பெருகும்.
செம்பருத்தி குல்கந்து பயன்கள்
- உடல் பலம் அதிகரிக்கும்
- இரத்த புஷ்டியைத் தரும்
- மனம் புத்துணர்வு பெரும்
- உடல் உற்சாகம் பெருகும்
- செரிமான கோளாறுகள் நீங்கும்
- மலச்சிக்கல் தீரும்
- இரத்தசோகை மறையும்