மூலிகை தேநீர்

நம்மை சுற்றி கிடைக்கும் பூக்கள், இலைகள், வேர், கொட்டை, காய் ஆகியவற்றைக் கொண்டு வீட்டிலேயே சுவையான மூலிகை தேநீர் தயாரித்து வைத்துக்கொண்டு தேவைக்கேற்ப பருகலாம். இதற்கு நம்மை சுற்றி கிடைக்கும் இந்த பொருட்களை பறித்து அல்லது நாட்டு மருந்து கடைகளில் வாங்கி சுத்தம் செய்து எளிதில் தயாரிக்கலாம்.

இயற்கையாக மூலிகை டீ பொடியை நாமே வீட்டில் தயாரித்துக் வைத்துக் கொண்டும் தேவைக்கேற்ப மூலிகை தேநீர் பருகலாம். ஆவாரம் பூ, பன்னீர் ரோஜாப்பூ, தாமரை பூ ஆகிய பூக்களை உலர வைத்துத் தூளாக்கி ஏலக்காய் கலந்து வைத்துகொள்ளவும்.

தேவைக்கேற்ப இந்த பொடியை தண்ணீரில் கொதி விட்டு பருக இருதயம் சம்மந்தமான அடைப்புகள் நீங்கி இதயம் பலப்படும். இரவு இதனை பருக நல்ல தூக்கம் வரும். தேவைக்கேற்ப வெல்லத்துடன் எலுமிச்சம் பழச்சாறு சேர்க்கலாம்.  

இவ்வாறு

  • அருகம்புல் வேர் பொடித்தும் தேநீர் தயாரிக்கலாம், சிறுநீர், குடல் தொந்தரவுகள் நீங்கும்.
  • மஞ்சள் கரிசலாங்கண்ணி பொடி தேநீர் ஈரல் தொந்தரவுகள் நீங்கும்.
  • அதிமதுரம் பொடி தேநீர் நுரையீரலை சுத்தம் செய்து சளியை வெளியேற்றும், ஈவினோ பிலியாவைக் குணப்படுத்துகிறது, ஒற்றை தலைவலி மறையும், மாதவிடாய் தொல்லைகள் நீங்கும். 
(1 vote)