மூலிகைச்சாறு / மூலிகை சூப்

குளிர் காலம், வெயில் காலம் என அனைத்து காலத்திற்கும் ஏற்ற ஒரு சாறு இந்த மூலிகைச் சாறு. குளிர்காலங்களில் உடலுக்கு தேவையான ஒரு கதகதப்பை கொடுக்கக்கூடிய மூலிகைகளைக் கொண்டு இந்த சாறை தயாரிக்கலாம். அதேபோல வெயில் காலத்தில் உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கக் கூடிய மூலிகைகளைக் கொண்டு இந்த சாறு தயாரிக்கலாம்.

இனி மழை காலம், குளிர்காலத்திற்கு ஏற்ற இருமல், சளி போன்ற தொந்தரவுகளுக்கும், குளிருக்கும் ஏற்ற ஒரு இதமாக மூலிகைச்சாறு எவ்வாறு தயாரிப்பது என பார்க்கலாம். முடக்கறுத்தான், தூதுவளை போன்ற மூலிகைகளைக் கொண்டு இதனை தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்

  • ¼ ஸ்பூன் சுக்கு தூள்
  • ¼ ஸ்பூன் திப்பிலி
  • சிறிது மிளகு தூள்
  • தேவையான அளவு உப்பு
  • சிறிது கறிவேப்பிலை
  • சிறிது கொத்தமல்லி

செய்முறை

  • முதலில் முடக்கறுத்தான், தூதுவளை நன்கு சுத்தம் செய்து நீரில் அலசி விட்டு பின் மூலிகைகளை சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவேண்டும்.
  • மூலிகைகளுடன் பூண்டு, சின்னவெங்காயம், சுக்கு தூள், திப்பிலி ஆகியவற்றைச் சேர்த்து நீர் வெட்டு நன்கு கொதிக்க விட வேண்டும்.

  • கீரைகள் நன்கு கொதித்து குழையும் சமயத்தில் சீரகத் தூள் சேர்த்து ஒரு கொத்தி கொதிக்கவிட்டு அடுப்பை அணைத்து விட வேண்டும்.
  • கொதித்த மூலிகைகளின் சாறை மட்டும் வடித்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
  • அதில் தேவையான அளவு மிளகுத்தூள், உப்பு சேர்த்து கொத்தமல்லி, கருவேப்பிலை சேர்த்து பரிமாறலாம்.

உடலுக்கு தேவையான ஒரு கதகதப்பை கொடுக்கும் ஒரு அற்புதமான மூலிகைச்சாறு இது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தேவையான சத்துக்களை கொண்டுள்ளது. குறிப்பாக சுண்ணாம்புச் சத்து இரும்புச் சத்து அதிகம் கொண்ட ஒரு மூலிகை சாறு.

5 from 1 vote

மூலிகை சாறு / மூலிகை சூப்

உடலுக்கு தேவையான ஒரு கதகதப்பை கொடுக்கும் ஒரு அற்புதமான மூலிகைச்சாறு இது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தேவையான சத்துக்களை கொண்டுள்ளது. குறிப்பாக சுண்ணாம்புச் சத்து இரும்புச் சத்து அதிகம் கொண்ட ஒரு மூலிகை சாறு.
Soup
Indian
herbal soup, mooligai soup
ஆயத்த நேரம் : – 5 minutes
சமைக்கும் நேரம் : – 10 minutes
மொத்த நேரம் : – 15 minutes

தேவையான பொருட்கள்

  • ஒரு கை அளவு முடக்கறுத்தான்
  • ஒரு கை அளவு தூதுவளை
  • 10 சின்ன வெங்காயம்
  • 5 பல் பூண்டு
  • ஒரு ஸ்பூன் சீரகத் தூள்
  • ¼ ஸ்பூன் சுக்கு தூள்
  • ¼ ஸ்பூன் திப்பிலி
  • சிறிது மிளகு தூள்
  • தேவையான அளவு உப்பு
  • சிறிது கறிவேப்பிலை
  • சிறிது கொத்தமல்லி

செய்முறை

  • முதலில் முடக்கறுத்தான், தூதுவளை நன்கு சுத்தம் செய்து நீரில் அலசி விட்டு பின் மூலிகைகளை சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவேண்டும்.
  • மூலிகைகளுடன் பூண்டு, சின்னவெங்காயம், சுக்கு தூள், திப்பிலி ஆகியவற்றைச் சேர்த்து நீர் வெட்டு நன்கு கொதிக்க விட வேண்டும்.
  • கீரைகள் நன்கு கொதித்து குழையும் சமயத்தில் சீரகத் தூள் சேர்த்து ஒரு கொத்தி கொதிக்கவிட்டு அடுப்பை அணைத்து விட வேண்டும்.
  • கொதித்த மூலிகைகளின் சாறை மட்டும் வடித்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
  • அதில் தேவையான அளவு மிளகுத்தூள், உப்பு சேர்த்து கொத்தமல்லி, கருவேப்பிலை சேர்த்து பரிமாறலாம்.

1 thought on “மூலிகைச்சாறு / மூலிகை சூப்

  1. Chittu

    5 stars
    அருமை

Comments are closed.