கற்பூரவள்ளி சூப்

சளி, இருமல், காய்ச்சலுக்கு ஏற்றது. நேரடியாக குழந்தைகளுக்கு கற்பூரவள்ளி இலையையும், துளசி இலையையும் கொடுக்க உண்ண மறுப்பார்கள், அதற்கு மாற்றாக அனைவரும் விரும்பி உண்ணும் வகையில் இந்த இலைகளை வைத்து சூப் தயாரித்து அளிக்க பெரியவர்கள் உட்பட அனைவரும் விரும்பி உண்பார்கள். கற்பூரவள்ளி இலைகளை கொண்டு சட்னியும் செய்து உண்ணலாம்.

தேவையான பொருட்கள்

  • 10 கற்பூரவள்ளி இலை
  • 10 சின்ன வெங்காயம்
  • 1 பல் பூண்டு 
  • 10 துளசி இலை
  • சிறிது மிளகு சீரகத்தூள்
  • சிறிது இந்து உப்பு 
  • 1 ஸ்பூன் பசு நெய் 
  • 1 பட்டை
  • 1 கிராம்பு

செய்முறை

ஒரு வாணலியில் பசு நெய்யை ஊற்றி அதில் பட்டை கிராம்பு தாளித்து அதனுடன் கற்பூரவள்ளி இலை, துளசி இலை, சின்ன வெங்காயம், பூண்டு ஆகியவற்றை நன்கு வதக்கி ஆற வைக்கவும்.

ஆறியவுடன் அவற்றை மைய அரைத்து சிறிது நீருற்றி கொதிக்கவிடவும். 

லேசாக கொதிவந்ததும் அடுப்பை அணைத்து தேவையான அளவு இந்துப்பு, மிளகு சீரகத்தூள் சேர்த்து அருந்தவும். 

குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. சளி, இருமல், காய்ச்சலுக்கு நல்லது.

கற்பூரவள்ளி சூப்

சளி, இருமல், காய்ச்சலுக்கு ஏற்றது. நேரடியாக குழந்தைகளுக்கு கற்பூரவள்ளி இலையையும், துளசி இலையையும் கொடுக்க உண்ண மறுப்பார்கள், அதற்கு மாற்றாக அனைவரும் விரும்பி உண்ணும் வகையில் இந்த இலைகளை வைத்து சூப் தயாரித்து அளிக்க பெரியவர்கள் உட்பட அனைவரும் விரும்பி உண்பார்கள்.
ஆயத்த நேரம் : – 15 minutes
சமைக்கும் நேரம் : – 15 minutes
மொத்த நேரம் : – 30 minutes
பரிமாறும் அளவு : – 2

தேவையான பொருட்கள்

  • 10 கற்பூரவள்ளி இலை
  • 10 சின்ன வெங்காயம்
  • 1 பல் பூண்டு 
  • 10 துளசி இலை
  • சிறிது மிளகு சீரகத்தூள்
  • சிறிது இந்து உப்பு 
  • 1 ஸ்பூன் பசு நெய் 
  • 1 பட்டை
  • 1 கிராம்பு

செய்முறை

  • ஒரு வாணலியில் பசு நெய்யை ஒற்றி அதில் பட்டை கிராம்பு தாளித்து அதனுடன் கற்பூரவள்ளி இலை, துளசி இலை, சின்னவெங்காயம், பூண்டு ஆகியவற்றை நன்கு வதக்கி ஆறவைக்கவும்.
  • ஆறியவுடன் அவற்றை மைய அரைத்து சிறிது நீருற்றி கொதிக்கவிடவும். 
  • லேசாக கொதிவந்ததும் அடுப்பை அணைத்து தேவையான அளவு இந்துப்பு, மிளகு சீரகத்தூள் சேர்த்து அருந்தவும். 
  • குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. சளி, இருமல், காய்ச்சலுக்கு நல்லது.